இந்தியா, ஜப்பான் இடையே ராணுவ கூட்டு ஒப்பந்தம்

0
274

இந்தியா, ஜப்பான் இடையே ராணுவ கூட்டு ஒப்பந்தம்

டெல்லி: இந்தியா-ஜப்பான் இடையே ராணுவ கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா எல்லை பிரச்சனையை அடுத்து இந்தியா பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் அண்டை நாடுகளுடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவும், ஜப்பானும் முக்கிய இராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளர். இரு நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, இரு நாட்டு ராணுவ தளவாடங்கள் மற்றும் தளங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி, ராணுவ வீரர்கள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வது, இரகசிய தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற பலவிதமான அம்சங்களிலும், இரு நாடுகளும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.

ஜப்பான் தவிர அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனும் இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.