“6 மணி நேரத்துக்கு மேலாக நின்றுகொண்டே..”: உங்களை பார்த்ததும் கால் வலியும் உடல் அயர்ச்சியும் காணாம போச்சு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றன.இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.கவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.காஞ்சிபுரம், வேலூர், கரூர், கோவை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கழக மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் காலையும், மாலையும், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்தம் உறவினர்கள் மற்றும் அவர்களது வெற்றிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகளைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.கால் வலியையும் உடல் அயர்ச்சியையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு உள்ளாட்சிப் பிரதிநிதியையும் சந்தித்து, அவர்களின் மக்கள் மணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முப்பதுக்கும் மேற்பட்ட கழக மாவட்டங்களைச் சேர்ந்த வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள்- அவர்களது குடும்பத்தினர், வெற்றிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் என ஆயிரக்கணக்கானோர் என்னைச் சந்தித்து வெற்றிக் களிப்பைப் பகிர்ந்துகொண்டனர்.உடன்பிறப்புகளின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் காணும்போது கால் வலியும் உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறது. விடியலில் முளைத்த சூரியக் கதிர்களை வாழ்த்தினேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முப்பதுக்கும் மேற்பட்ட கழக மாவட்டங்களைச் சேர்ந்த வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள்- அவர்களது குடும்பத்தினர், வெற்றிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் என ஆயிரக்கணக்கானோர் என்னைச் சந்தித்து வெற்றிக் களிப்பைப் பகிர்ந்துகொண்டனர். (1/2) pic.twitter.com/k6bHRpfw9w
— M.K.Stalin (@mkstalin) February 23, 2022
உடன்பிறப்புகளின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியையும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியையும் காணும்போது கால் வலியும் உடல் அயர்ச்சியும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகுகிறது.
விடியலில் முளைத்த சூரியக் கதிர்களை வாழ்த்தினேன். (2/2) pic.twitter.com/IwlA0gQ4Wp
— M.K.Stalin (@mkstalin) February 23, 2022