டி20 உலகக்கோப்பை இந்திய அணி சாம்பியன்! காத்திருப்பு முடிந்தது!! யுகங்களுக்கு கிடைத்த வெற்றி! செல்வது கடினமாக இருந்தபோது, ​​​​மென் இன் ப்ளூ அவர்கள் எதனால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதைக் காட்டியது!!!

0
273

டி20 உலகக்கோப்பை இந்திய அணி சாம்பியன்! காத்திருப்பு முடிந்தது!! யுகங்களுக்கு கிடைத்த வெற்றி! செல்வது கடினமாக இருந்தபோது, ​​​​மென் இன் ப்ளூ அவர்கள் எதனால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதைக் காட்டியது!!!

உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.

உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்த கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமலும், சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும் வெளியேற இந்திய அணி, 34 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது.

இதன்பின்னர் இணைந்த அக்சர் படேல் – விராட் கோலி இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடியாக ரன்களை குவித்துக் கொண்டிருந்த அக்சர் படேல், 31 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் விராட் கோலி – ஷிவம் துபே இணை அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. துபே 27 ரன்களில் ஆட்டமிழக்க அரைச்சதம் கடந்த விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது.

உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த வகையில் டி20 போட்டிகளில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது இந்திய அணி. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா வேகத்தில் போல்டாகி வெளியேறினார். கேப்டன் மார்க்ரம் 4 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த குவின்டன் டி காக் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் எடுத்தனர். ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்காவுக்கு நம்பிக்கை அளித்த குவின்டன் டி காக் 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

டி காக் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹெய்ன்ரிக் கிளாசன், 5 சிக்சர்கள் உடன் 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது அந்த அணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் வந்தது. அப்போது 18 ஓவரை வீசிய பும்ரா ஜேன்சனின் விக்கெட்டை எடுத்து மேலும் ஆட்டத்தை மாற்றி விறுவிறுப்பை கூட்டினார். அதுபோல் 19வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். இதனால், இந்திய ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டனர். அப்போது தென்னாப்ரிக்கா அணியின் எண்ணிக்கை 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களாக இருந்தது.

இதனால் கடைசி ஒரு ஓவரில், 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தென்னாப்ரிக்கா தள்ளப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா தன்னுடைய முதல் பந்திலேயே மில்லரை வெளியேற்றினார். அந்த பந்தை பவுண்டரி எல்லைக்குத் தூக்கியடித்தபோது, சூர்யகுமார் யாதவ் அதை லாகவமாக கேட்ச் செய்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். எனினும் அடுத்த பந்தில் 4 ரன்களை வழங்கினாலும், அடுத்தடுத்த பந்துகளில் ஒவ்வொரு ரன்களை வழங்கினார். என்றாலும் 5 பந்தில் மீண்டும் ஒரு விக்கெட்டை (ரபாடா) எடுத்து இந்தியாவுக்கு மீண்டும் ஒரு கப்பை வாங்கிக் கொடுத்தார், ஹர்திக்.

இதன்மூலம் 2007 தோனி தலைமைக்குப் பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி உச்சி முகர்ந்துள்ளது. இந்த மகிழ்ச்சியைத் தாங்காத இந்திய அணி, ஆனந்தக் கண்ணீரில் நனைந்தனர். கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா எனப் பலரும் கண்ணீர்விட்டு அழுதது மைதானத்தையே கலங்கவைத்தது.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு, பேட்டியளித்த அவர், “இதுவே தமது டி20 கடைசி உலகக்கோப்பை” என்றார்.

உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த வகையில் டி20 போட்டிகளில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது இந்திய அணி.

https://x.com/ikamalhaasan/status/1807257738759876769/photo/1