கொரோனா தடுப்பூசியை 100 சதவீதம் போட்டுக்கொண்ட கிராமம்! அசத்தும் புதுச்சேரி

0
196
தடுப்பூசியை 100 சதவீதம் போட்டுக்கொண்ட கிராமம்

கொரோனா தடுப்பூசியை 100 சதவீதம் போட்டுக்கொண்ட கிராமம்! அசத்தும் புதுச்சேரி

புதுச்சேரியின் புதுக்குப்பம் கிராமம், 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்மாதிரி கிராமமாக திகழ்கிறது. தடுப்பூசி செலுத்தும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நேற்று முதல் கிராமங்களில் தடுப்பூசி போடும் முகாமை சுகாதார துறை துவங்கியுள்ளது. இதில் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட புதுகுப்பம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி காந்தன் முன்னிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாமினை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தொடங்கி வைத்தார். முகாம் துவங்கியவுடன் ஏராளமான இளம்பெண்கள், பெண்கள் என அனைவரும் வந்து வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

2 மணி நேரத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
இதனால் புதுகுப்பம் கிராமம் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராமமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுகுப்பம் கிராமத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோர் 125 பேரும் , 18 வயதில் இருந்து 45 வயதுக்குட்பட்ட 250 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதனால் கிராமம் முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராமமாக மாறியுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாநிலமாக புதுச்சேரி உருவெடுக்கும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.