வெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்

0
235

வெளியானது 34 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை பட்டியல்

தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை – கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா மிக எளிய முறையில் நடைபெறுகிறது.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்கவுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவைப் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது.

முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். அவர் இந்திய ஆட்சிப்பணி, காவல் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்தை கவனிக்கவுள்ளார்.

நீர்ப்பாசனத்துறை, சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை – துரைமுருகன்

உள்ளாட்சித்துறை – கே.என் நேரு

மின்சாரத்துறை – செந்தில் பாலாஜி

சுகாதாரத்துறை – மா.சுப்பிரமணியன்

கூட்டுறவுத்துறை – ஐ.பெரியசாமி

பொதுப்பணித் துறை – எ.வ வேலு

பள்ளிக் கல்வித்துறை – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உயர் கல்வித்துறை – பொன்முடி

தொழில்துறை – தங்கம் தென்னரசு

வருவாய்த்துறை – KKSSR ராமச்சந்திரன்

சட்டத்துறை – எஸ்.ரகுபதி

டி.எம்.அன்பரசன் – ஊரக தொழில் துறை

எம்.பி.சமிநாதன் – தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளம்பரத்துறை

கீதா ஜீவன் – சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் – மீன்வளத்துறை

எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத் துறை

கே.ராமசந்திரன் – வனத்துறை

சக்கரபாணி – உணவு மற்றும் பொது விநியோகத் துறை

செந்தில்பாலாஜி – மின்சாரத்துறை

ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் நெசவுத் துறை

ம.சுப்ரமணியன் – சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை

பி.மூர்த்தி – வணிக வரி மற்றும் வரிகள் மற்றும் பதிவுத்துறை

எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பி.கே.சேகர்பாபு – இந்து சமய நலத்துறை

பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை

எஸ்.எம்.நாசர் – பல்வளத்துறை

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மை நலத்துறை

அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வி துறை

வி.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், மற்றும் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாடு வளர்ச்சித்துறை

சி.வி.கணேசன் – தொழிலாளர் மற்றும் ஸ்கில் மேம்பாடு துறை

மனோ தங்கராஜ் – தொழில்நுட்பத் துறை

மதிவேந்தன் – சுற்றுலாத்துறை

கயல்விழி – ஆதிதிராட நலத்துறை

“கொரோனா காலம் என்பதால் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவை வீட்டில் இருந்தே காணுங்கள். உங்களது உடல் நலம் முக்கியம்” என தொண்டர்களுக்கு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.