முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது!

0
211

முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது!

கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்து மேலும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவையில் சிறப்பான பணியாற்றி வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதனையொட்டி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், பல்கலைகழகத்தின் தலைவர் மேரி ஜான்சன் மற்றும் பல்கலைகழகத்தின் துனை தலைவர் மரிய பெர்ணடெட் தமிழரசி ஜான்சன் தமிழத்தின் புதிய முதல்வர்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சத்தை வழங்கினார்.

தமிழக மக்களுக்காக நிவாரண நிதியை வழங்கிய சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழக நிர்வாகத்திற்க்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

ALSO READ:

Sathyabama deemed university donate Rs.50 lakh to Chief Minister’s Public Relief Fund