மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

0
197

மனிதக் கழிவை அகற்றும் இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தமது தொகுதியில் இயந்திரத்தை கொண்டு கழிவை அகற்றும் முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.இதுகுறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ”மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் இயந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்” எனக் கூறினார்.