பொது மக்கள் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு தர வேண்டும் : தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பின் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் பதில்

0
242

பொது மக்கள் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு தர வேண்டும் : தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பின் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் பதில்

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் என்றும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சித்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் டாப் 8-ல் தமிழ்நாடு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,99,807 ஆக அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் கொரேனா கட்டுப்பாடுகள் தீவரப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை தோனம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஊரடங்கு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பின் முழுஊரடங்கு என்பது தவறான தகவல். இதை யாரும் நம்ப வேண்டாம். கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். அவசியம் இல்லாத பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பொது மக்கள் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

சென்னையில் 100-ல் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. இந்த தொற்றை 5-க்கும் கீழ் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசு கூறி உள்ளது. காய்ச்சல் முகாம்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் கோவிட் நேரத்தில் தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் சுகாதாரத்துறை யிடம் கேட்டுக் கொண்டது. அற்கான முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி சுத்தம் செய்து, சானிடைசர் வைக்கப்படும். வாக்களிப்பவர்களுக்கு கையுறை, கொரோனா நோயாளிகளுக்கு பிபிஇ கிட் வழங்கப்டும். வாக்குச்சாவடிகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்தார்.

தேர்தலுக்கும் தடுப்பூசி போடுவதற்கும் தொடர்பில்லை. தடுப்பூசி போடுபவர்கள் தொடர்ந்து போட்டு கொள்ளலாம். தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வரலாம், வந்தாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்.