பாப்பாபட்டி மக்களின் கோரிக்கை : நொடியும் தாமதிக்காமல் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0
143

பாப்பாபட்டி மக்களின் கோரிக்கை : நொடியும் தாமதிக்காமல் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அக்டோபர் 2-ம் நாளில் கிராமசபைக் கூட்டங்களை மீண்டும் நடத்துகிறது கழக அரசு. இதற்காக, மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரே நேரடியாகப் பங்கேற்றார். அப்போது அங்குள்ள மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது முதலமைச்சரின் பேசிய பெண் ஒருவர், பாப்பாபட்டி- மதுரை இடையே இயக்கப்படும் அரசு நகர் பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வாங்குவதாகவும், கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இந்தவேண்டுகோளை அதே இடத்தில் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் பாப்பாபட்டி- மதுரைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்க மாட்டர்கள் என அங்கேயே அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து மதுரையிலிருந்து பாப்பாபட்டிக்கு இயக்கப்படும் நகர் பேருந்துகளில் நேற்று முதல் பெண்களிடம் கட்டணம் பெறவில்லை. இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, “மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பாப்பா பட்டிக்கு 2 விரைவு பேருந்துகள், ஒரு சாதாரண கட்டண பேருந்து இயக்கப்பட்டு வந்தது. முதல் வரின் அறிவிப்பை அடுத்து பாப்பாபட்டிக்கு இயக்கப்பட்ட இரு விரைவு பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டு பெண்கள் இலவசமாக பய ணம் செய்ய நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.