நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

0
177

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விவேக் இன்று காலை சினிமா பட்டபிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகன் டெங்கு காய்ச்சலால் இறந்தது குறிப்பிடத்தக்கது.