திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், வழக்கு தொடர உரிமை இல்லை – சென்னை ஐகோர்ட்டு
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்சைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை, ஜோசப் பேபி என்பவருடன் சேர்த்து வைக்க கோரி கலைச்செல்வி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்திய நாதன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர சட்டரீதியாக் உரிமை இல்லை என கூறினார்.
பணம் கொடுக்கல் வாங்கலில் தொடர்பான முன் விரோதம் காரணமாக வழக்கு தொடர்ந்ததால் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.