தமிழக சட்டசபை தேர்தல் 2021: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

0
183

தமிழக சட்டசபை தேர்தல் 2021: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 132 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

திமுகவின் கோட்டையாக சொல்லப்படும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் கசாலியை விட பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

சென்னையில், வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலினை ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.

தேர்தல் களத்தில் கடுமையாக விமர்சித்துக் கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் – உதயநிதி ஸ்டாலின் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக் கொண்டதை அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் ஆச்சர்யமாக பார்த்தனர்.