தகுந்த பாதுகாப்போடு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் பழங்குடியின மக்கள்

0
279

தகுந்த பாதுகாப்போடு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் பழங்குடியின மக்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. காலை முதலே மக்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகமாக வசிக்கும் பழங்குடியின மக்கள் காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றி வருகிறார்கள். வழக்கத்தை விட பழங்குடியின மக்கள் இந்த தேர்தலில் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள்.

வாக்குச்சாவடிகளுக்கு வரும் மக்களுக்கு கையுறைகள், கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்களின் உடல் வெப்பமும் பரிசோதனை செய்யப்படுகிறது.