சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்! விண்ணப்பித்தால் வீட்டிற்கே வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்!!

0
156

சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்! விண்ணப்பித்தால் வீட்டிற்கே வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் நிலவும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை போக்குவதற்காக, அரசு நேரடியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. இதனால் அடுத்த வாரம் முதல் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகத் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மேலும் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கான மருத்துவ ஆலோசனை கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் குடியிருப்போர் தடுப்பூசி கேட்டு விண்ணப்பித்தால் வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. மாநகராட்சியின் அறிவிப்பில், இதில் “45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 30 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு அந்தந்த பகுதியிலேயே சிறப்பு முகாம் போடப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.