சென்னை போர் நினைவுச் சின்னத்தில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது

0
139

சென்னை போர் நினைவுச் சின்னத்தில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது

சென்னை: 

வெற்றி தினத்தையொட்டி சென்னை போர் நினைவுச் சின்னத்தில் தென் மண்டல ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருண், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து , வெற்றி தின சிறப்பு ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ராணுவ அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இவ்வோட்டத்தில் பங்கேற்றனர்.

1971 இல் இந்திய ராணுவம், இந்தோ-பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதை முன்னிட்டு ‘வெற்றி தினம்’ ‘ ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்போரில் சுமார் 93000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர் இதன் காரணமாக பங்களாதேஷ் விடுதலை பெற்றது.