குழந்தை ஆபாசபடங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

0
111

குழந்தை ஆபாசபடங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, சைபர் ஆபாச படங்கள் / குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுபவர்கள் மீது மாநிலங்கள் வாரியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கைகள், தண்டனை பெற்றவர்கள், விசாரணை முடிவுகள், குற்ற சதவீதம், கைது செய்யப்பட்டவர்கள் பற்றி தேசிய குற்ற ஆவண காப்பகம் வழங்கிய விவரங்கள் கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆன்லைன் மூலம் குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுவது, பார்ப்பது, பரப்புவது போன்ற குற்றங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் 67B பிரிவின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

சிபிஐ மூலமாக பெறப்படும் இன்டர்போல் பட்டியலில் உள்ள குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களை, மத்திய அரசு அவ்வப்போது தடை செய்து வருகிறது.

இணையளத்தை பயன்படுத்தும் போது டிஜிட்டல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்படுத்தி வருகிறது.

இந்த பாதுகாப்பு விழிப்புணர்வுத் தகவல்களை https://www.infosecawareness.in என்ற பிரத்தியேக இணையளம் வழங்குகிறது.