குறைந்த செலவில் விரைவாக கழிப்பறைகள் கட்டுவதற்கு சிஎஸ்ஐஆர் – சிஇசிஆர்ஐ தொழில்நுட்பம்

0
95

குறைந்த செலவில் விரைவாக கழிப்பறைகள் கட்டுவதற்கு சிஎஸ்ஐஆர் – சிஇசிஆர்ஐ தொழில்நுட்பம்

சென்னை, 

மத்திய அரசால் முன்மொழியப்பட்ட தூய்மை இந்தியா இயக்கத்தின் நோக்கத்தை அடையும் வகையில் குறைந்த செலவில் கழிப்பறைகளைக் கட்டுவதற்கான தொழில்நுட்பத்தை சிஎஸ்ஐஆர் – சிஇசிஆர்ஐ உருவாக்கியுள்ளது.

காரைக்குடியில் உள்ள இந்தியன் வங்கியின் அழகப்பாபுரம் கிளையின் நிதியுதவியைப் பயன்படுத்தி சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பனம்பட்டி மற்றும் பெத்தாச்சி குடியிருப்பு ஆகியவற்றில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் குறைந்த செலவிலான 8 கழிப்பறைகளை சிஎஸ்ஐஆர் – சிஇசிஆர்ஐ- காரைக்குடிப் பிரிவு கட்டியுள்ளது. ஒவ்வொரு கழிப்பறையும் ரூ.12,500 செலவில் கட்டப்பட்டுள்ளது. இது வழக்கமான கழிப்பறைகளுக்கு ஆகும் செலவைவிட 40% குறைவாகும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் கழிப்பறைகளை விரைவாகக் கட்டுவதற்கும், பல்வேறு வடிவங்களுக்கு ஏற்ப எளிதாக மாற்றியமைப்பதற்கும் ஏதுவாக இருக்கும் என்று சிஎஸ்ஐஆர் – சிஇசிஆர்ஐ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு சிஎஸ்ஐஆர் – சிஇசிஆர்ஐ இயக்குநர் டாக்டர் என். கலைசெல்வியும், இந்தியன் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளர் திரு பி வி பாலசந்திரனும் வெள்ளி (07.01.2022) அன்று திறந்துவைத்தனர்.