கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் தீ விபத்து : நள்ளிரவில் துரித நடவடிக்கை எடுத்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ!

0
177

கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் தீ விபத்து : நள்ளிரவில் துரித நடவடிக்கை எடுத்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ!

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரி மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து அறிந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட ஊழியர்கள் தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. தீ விபத்தினால் மருத்துவமனை அறையில் இருந்த குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தின் செய்தியறிந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விரைந்து சென்று உரிய நடவடிக்கை மேற் கொண்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில் நேரில் வந்து இங்கே யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரும் அச்சப்படத் தேவையில்லை. முதலமைச்சர் அவர்கள் நேரில் வருவதாக கூறினார்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக நானும் சட்டமன்ற உறுப்பினரும் செல்கிறோம் என்று தெரிவித்துவிட்டு வந்தோம். விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், மீண்டும் தற்போது தீ விபத்து ஏற்பட்ட பகுதியை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.