கருத்து தி(க)ணிப்புகளை முறியடிப்போம் – ஈபிஎஸ், ஓபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்…

0
360

கருத்து தி(க)ணிப்புகளை முறியடிப்போம் – ஈபிஎஸ், ஓபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்…

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிஉறுதி செய்யப்பட்டிருக்கிறது, கருத்துகணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்பிரச்சாரங்கள் நம்மளை ஒன்று செய்யமுடியாது என்று அதிமுக தொண்டர்களுக்குமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் கூட்டாக எழுதியுள்ளகடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்அதிமுக ஒருங்கிணைப்பாளர்பன்னீர்செல்வம் கூட்டாக அதிமுகதொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், அதிமுக நிறுனவர் எம்.ஜி.ஆர் மற்றும்ஜெயலலிதா இருவரும் தேர்தல் களத்தில்கண்ட தொடர் வெற்றியை போல் வரலாற்றுசிறப்புமிக்க வெற்றியினை அதிமுகவும்அதன் கூட்டணி கட்சிகளும் பெற்றிடும்வகையில் உழைத்திடும் அதிமுகதொண்டர்களுக்கு நன்றி கூறவார்த்தைகளே இல்லை என்றுதெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இருவரும்மேற்கொண்டுள்ள பிரச்சாரங்களின் போது உற்சாகத்துடன் தொண்டர்கள்பணியாற்றுவதை பார்த்து ஆனந்தம்அடைகிறோம். பிரச்சாரங்களின் போது“தொண்டர்களின் உழைப்பையும் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களின் வாஞ்சைமிகு வரவேற்பையும் கண்டு மகிழஜெயலலிதா நம்மிடையே இல்லாமல்போய்விட்டாரே” என்ற ஏக்கம் ஏற்படுவதாககுறிப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகஎன்ற கட்சியே இருக்காது , எடப்பாடிபழனிசாமி தலைமையிலான அரசு ஒரு நாள்தாங்குமா, ஒரு வாரம் ஓடுமா, இன்னும் ஒருமாதத்தில் கவிழ்ந்துவிடும் என்றுகூறியவர்களின் மூக்கில் விரல் வைத்துபிரமிக்கும் வகையில் சிறந்த ஆட்சியைகொடுத்துள்ளோம். தற்போதுதலைநிமிர்ந்து சென்று மக்களிடம் வாக்குகேட்கிறோம் என்று அந்த மடலில்தெரிவித்துள்ளனர்.

அதிமுக அரசின் சாதனைகளை கண்டுவியக்காதவர்கள் இல்லை. புயல்கள், பெருமழை, வெள்ளப்பெருக்கு, பருவம்தவறிப் பெய்த பேய் மழை, கடுமையானவறட்சி, கொரோனா பெருந்தொற்று ஆகியஅனைத்து பேரிடர்களையும் வெற்றிகரமாகசமாளித்து நிவாரணப் பணிகளை திறம்படமேற்கொண்டதாகவும் தொண்டர்களுக்குஎழுதிய மடலில் ஒருங்கிணைப்பாளர்பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்கள் அதிமுகவிற்கு 2016ம் ஆண்டுகொடுத்த தொடர் வெற்றியை போல்தற்போதும் வழங்க காத்திருக்கிறார்கள்என்பது பிரச்சாரங்களில் சந்திக்கும் மக்கள்கூட்டமும், அதன் எழுச்சியும் எடுத்து காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருக்கிறது, வல்லுநர்கள் மற்றும்பொதுமக்கள் மூலம் வரும் தகவல்கள்அதிமுக மீது மக்கள் பேரன்புகொண்டிருப்பதையும் அந்த பேரன்புவாக்குகளாக அதிமுகவிற்கு வந்து சேரும்என்றும் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியும், அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும்கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில்தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கைகளும் ஊடகங்களும் கருத்துகணிப்பு என்ற பெயரில் கருத்துதிணிப்புகளை கையில் எடுத்துள்ளன. கடந்த கால கருத்து கணிப்பு முடிவுகள்தவறாக போயின என்பதை எல்லோருக்கும்தெரியும் என்றும் எம்.ஜி.ஆர் மற்றும்ஜெயலலிதா காலங்களில் கூட கருத்துகணிப்புகள் மக்களின் தீர்ப்புகளின் முன்தோற்று போயுள்ளன என்றும்தொண்டர்களுக்கு எழுதிய மடலில்தெரிவித்துள்ளனர்.

கருத்து கணிப்பு என்ற பெயரில் நடைபெறும்பொய்ப் பிரச்சாரங்களால் மக்கள் யாரும்தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை, ஜெயலலிதாவின் அரசியல்பள்ளியில் பாடம் பயின்ற நம்மளை பொய்பிரச்சாரங்களும் கருத்து திணிப்புகளும்என்ன செய்ய முடியும் என்றும் தேர்தல் நாள்நெருங்கி கொண்டிருக்கிறது, அதிமுகதொண்டர்கள் கூட்டணி கட்சியினருடன்இணைந்து முழு மூச்சுடன் பணியாற்றிதொடர் வெற்றிக்கு தொய்வின்றிஉழைப்போம் என்று தொண்டர்களுக்குஅதிமுக ஒருங்கிணைப்பாளர்பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமியும் கூட்டாக கடிதம் எழுதியுள்ளகடிதத்தில் தெரிவித்துள்ளனர்.