என் தந்தை மன்னிக்க கற்றுத்தந்தவர்- ராகுல் காந்தி டுவீட்

0
154

என் தந்தை மன்னிக்க கற்றுத்தந்தவர்- ராகுல் காந்தி டுவீட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்து 31ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர். மேலும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். இதனிடையே தமிழ்நாட்டில் நிலகிரியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனிடையே ராகுல் காந்தி ட்விட்டரில் உருக்காம பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கருணை உள்ளம் கொண்டவர் தனது தந்தை. தந்தை ராஜீவ் காந்தி இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் மன்னிக்கும் குணத்தை கற்பித்த சிறந்த தந்தையாக ராஜீவ் காந்தி இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.