எங்களது ஒருநாள் சம்பளத்தை எடுத்துக்கொள்ளுங்கள் : அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!

0
209

“எங்களது ஒருநாள் சம்பளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” : அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!

கொரோனா பேரிடர் நிதிக்காக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பிடித்தம் செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா இரண்டாம் அலை கொடுந்தொற்று அதிக அளவில் பரவுகின்ற சூழ்நிலையில் கொடுந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிந்து உள்ளார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், அது மட்டுமின்றி, ஊரடங்கு

காலத்தில் தமிழக மக்கள் கட்டப்படக்கூடாது என்பதற்காக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ரூ 4000/-தில் முதல் தவணையாக ரூ 2000/- அறிவித்து எப்போது மக்கள் நலனில் அக்கரை கொண்ட அரசு என்பதை நிரூபித்து இருக்கின்றார் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசிற்கு உதவிடும் விதமாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பங்காக ஒருநாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக பிடித்தம் செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்

அதேபோன்று துறை சார்ந்த நியமணங்கள் பணி மாறுதல்களில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தவிட்டருப்பது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறு உருவம் என்பதை நிருத்துள்ளார் தமிழக முதல்வர் அவர்கள் நல்லாட்சி தருவார் என்பதற்கான முன்னோட்டம் என்பதில் ஐயமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.