ஊடகங்கள் தனிநபர் அணுகுமுறையிலிருந்து விலகி நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்

0
163

ஊடகங்கள் தனிநபர் அணுகுமுறையிலிருந்து விலகி நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்

புதுதில்லி, இந்தியாவுக்கு எதிராக தீய எண்ணங்களை கொண்டிருப்பவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டாம் என்று குடியரசு துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று எச்சரித்தார். தேசத்திற்கு விரோதமான சக்திகளால் முன்வைக்கப்படும் சவால்களை எடுத்துரைத்தார். “பாரதத்திற்கு விரோதமானவர்கள் என்று நிலைப்பாடு கொண்டவர்களுடன் நாம் சகோதரத்துவம் கொள்ள முடியாது. அவர்கள் பாரதத்திற்கு சவால்களை வழங்க விழைகிறார்கள் என்று கூறினார்

நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சில தனிநபர்கள் இந்தியாவின் அமைப்புகளையும் தேசிய வளர்ச்சியையும் எவ்வாறு குறைமதிப்பிற்கு உட்படுத்த முயல்கிறார்கள் என்பது குறித்து கவலை தெரிவித்தார். “நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் அவதூறு பரப்பும் ஒருவருக்கு பாராட்டு கிடைக்குமா? நமது புனிதமான அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன, இது நமது வளர்ச்சியைப் பாதிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற சன்சாத் டிவி@3 மாநாட்டின் தொடக்க விழாவில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய திரு தன்கர், தேசிய விவாதத்தை வடிவமைப்பதில் ஊடகங்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். இதழியலில் தனிநபரை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து விலகி, நிறுவனங்கள் மற்றும் தேசிய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தனிநபரை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நாம் எவ்வாறு கொண்டிருக்க முடியும்? நமது புனித அமைப்புகள் இழிவுபடுத்தப்படக் கூடாது” என்று அவர் கூறினார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்களின் முக்கிய பங்கை வலியுறுத்திய திரு தன்கர், அதிகப்படியான விமர்சனங்களின் போக்கு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் நேர்மறையான வளர்ச்சி  அம்சங்களில் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலக அரங்கில் நாட்டின் நற்பெயரைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு தன்கர், “குறிப்பாக வெளியில் பாரதம் குறித்து தவறான சித்திரத்தை நாம் கொண்டிருக்க முடியாது. இந்த நாட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு இந்தியரும், இந்த நாட்டின் தூதர்தான். தேசம், தேசியவாதத்திற்கான 100% அர்ப்பணிப்பைத் தவிர அவரது மனதில் வேறு எதுவும் இருக்க வேண்டியதில்லை என்று கூறினார்.

https://x.com/i/status/1836709956571242815