உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

0
97

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நேட்டோ படையில் சேர தீவிரம் காட்டி வரும் உக்ரைனுக்கு எதிராக ஆத்திரத்தில் உள்ள ரஷ்யா, நேற்று முதல் அந்நாட்டிற்கு எதிராக போர் நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. இதனால் இரு தரப்பிலும் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உக்ரைனில் பெரும் பதற்றம் நிலவுவதை அடுத்து, அங்கு படிக்கும் மாணவர்களை மீட்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்களை மீட்டிடும் வகையில், மாவட்ட, மாநில அளவில் அலுவலர்களை அரசு நியமித்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசிடம் உதவிக்கோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கான பயணச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த உதவியை பெற விரும்பும் மாணவர்கள், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸை செல்போன் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.