இன்னுயிர் காப்போம் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

0
225

இன்னுயிர் காப்போம் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு 48 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கும் நோக்கில், ’நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற தொடங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தமிழ்நாடு முழுவதும் 610 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு 48 மணிநேரம் இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் இத்திட்டத்திற்கான வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை சென்னையை அடுத்த மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலை விபத்துகளில் சிக்கியவர்களின் முதல் 48 மணி நேரத்திற்கான சிறப்பு செலவை அரசே ஏற்கும் என தெரிவித்தார்.

48 மணி நேரத்திற்கு பிறகு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் எனவும், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவே, இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.