இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கை மீதான கருத்துக்களை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு

0
103

இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள்தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கை மீதான கருத்துக்களை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு

புதுதில்லி,

இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) டிசம்பர் 23, 2022 அன்று வெளியிட்டிருந்தது. இதில் வெளியிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களை ஜனவரி 20, 2023 வரையும், எதிர் கருத்துக்களை பிப்ரவரி 3, 2023 வரையும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

கருத்துக்கள் மற்றும் எதிர் கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பங்குதாரர்களும், சங்கங்களும் கோரிக்கை வைத்திருந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான கருத்துக்களை பிப்ரவரி 10, 2023 வரையும், எதிர் கருத்துக்களை பிப்ரவரி 24, 2023 வரையும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களையும், எதிர் கருத்துக்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பிரதியை [email protected] என்ற முகவரிக்கும் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு ட்ராயின் ஆலோசகர் (பிராட்பேண்ட் மற்றும் கொள்கை பகுப்பாய்வு) திரு சஞ்சீவ் குமார் ஷர்மாவை +91-11-23236119 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.