நினைவெல்லாம் நீயடா சினிமா விமர்சனம் : நினைவெல்லாம் நீயடா காதலின் சுவாசத்தில் மாறுவேட காதலி | ரேட்டிங்: 2.5/5

0
193

நினைவெல்லாம் நீயடா சினிமா விமர்சனம் : நினைவெல்லாம் நீயடா காதலின் சுவாசத்தில் மாறுவேட காதலி | ரேட்டிங்: 2.5/5

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரித்து, சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார்.

இதில் பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, கேப்ரில்லா, மனோபாலா, மதுமிதா, ரஞ்சன்குமார், ஸ்ரீ பிரியங்கா, ரெடின் கிங்ஸ்லி, வழக்கு எண் முத்துராமன், ரோஹித், யுவலட்சுமி, அயலி அபி நட்சத்திரா, யாசர், பி.எல்.தேனப்பன், தண்டபாணி உட்பட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் :- ஒளிப்பதிவாளர்: ராஜா பட்டாச்சார்ஜி, படத்தொகுப்பு: ஆஷிஷ், கலை இயக்குனர்: முனிகிருஷ்ணா, ஸ்டண்ட் மாஸ்டர்: பிரதீப் தினேஷ்,பாடல் வரிகள்: இளையராஜா, பழனி பாரதி, சிநேகன்,பாடகர்கள்: யுவன்சங்கர் ராஜா,கார்த்திக் அனன்யா பட்,சிரீஷா பகவத்துல்லா,ஹரிப்ரியா, நடனம்: தினேஷ், தீனா, ஆடை: பிரதீப், பிஆர்ஒ: ஏ. ஜான்

இளைஞன் கௌதம் (பிரஜன்)தன் பள்ளி நாட்களையும், தன் பள்ளிக்காதலியின் நினைவலைகளில் படம் தொடங்குகிறது. பள்ளி மாணவனான கௌதம் (ரோஹித்) புதிதாக சேர்ந்த மலர்விழியை (யுவலட்சுமி) பார்;த்தவுடன் காதலிக்க தொடங்குகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகினாலும், தன் காதலை சொல்லாமல் இருக்கிறார் கௌதம்.பள்ளி முடியும் தருவாயில் அவளுக்கு ஒரு காதல் கடிதம் கொடுத்து அதை வீட்டிற்கு சென்று படிக்குமாறு கூறுகிறான் கௌதம். மறுநாள் மலர்விழி பள்ளிக்கு வராமல் போக, வீட்டிற்கு சென்று விசாரிக்கும் போது, மலர்விழி தன் தந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட உடனடியாக அமெரிக்கா சென்று விட்டதாகவும், கௌதமிடம் ஒரு வயலினை நினைவு பரிசாக கொடுக்க சொன்னதாக சொல்கிறார் வீட்டின் காவலாளி. ஓவ்வொரு முறையும் மலர்விழி வீட்டிற்கு சென்று விசாரிக்கும் கௌதமை விரட்டியடிக்கிறார் காவலாளி. ஏந்த ஒரு தகவலும் தெரியாமல் தொடர்பு கொள்ள முடியாமல் மலர்விழி நினைவாக பதினைந்து வருடங்கள் கடந்து விடுகிறது. இளைஞனான கௌதம் (பிரஜன்) மலர்விழியை நினைத்து கொண்டு திருமணம் செய்த கொள்ளாமல் இருக்கிறார். அவள் கொடுத்த இசைக்கருவியின் ஞாபகமாக, இசைக்கருவிகள் விற்கும் கடையை நடத்தி வருகிறார். வீட்டில் கௌதமை உயிருக்கு உயிராக நேசிக்கும் மாமன் மகளை(மனிஷா யாதவ்) திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்த அதற்கு சம்மதிக்காமல் இருக்கிறார் கௌதம். மலர்விழி திருமணம் செய்து கொண்டிருக்கலாம், கௌதமை மறந்திருக்கலாம் என்று பெற்றோரும், நண்பர்களும் எடுத்துக் கூறி மாமன் மகளை திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். ஆனால் தம்பதிகள் இருவருக்கும் ஒத்து வராததாலும், எப்பொழுதும் மலர்விழி நினைவாக இருக்கும் கௌதமின் நடவடிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டு காப்பக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மனைவி. காதலியின் நினைவால் குடிக்கு அடிமையாகிறார் கௌதம். இந்நிலையில் பள்ளித்தோழி மதுமிதாவின் சகோதரி திருமணத்திற்கு இந்தியா வருகிறார் மலர்விழி (சினாமிகா). காதலித்த கௌதமை தேடி வரும் மலர்விழி திருமணமானதை அறிந்து அதிர்ச்சியாகிறார். அதே சமயம் மலர்வழி தன் நினைவாக திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதையறிந்து மனமுடைந்து தடுமாறுகிறார் கௌதம். காதலர்கள் இருவரும் அதன் பின் என்ன முடிவு செய்தனர்? மனைவி என்ன ஆனார்? மலர்விழி இந்தியா வரக் காரணம் என்ன? மலர்விழி காதல் உண்மையானதா? திருப்பமான க்ளைமாக்ஸ் என்ன? என்பதே படத்தின் முடிவு.

பிரிந்த காதலியை நினைத்து பதினைந்து ஆண்டுகளாக வாடும் காதலன் கௌதமாக பிரஜன் இயல்பாகவும், திருமணத்தை வேண்டா வெறுப்பாக செய்து கொண்டு துன்பப்படும் போதும், பிரிந்த காதலியை சந்திக்கும் போதும், எதிர்பாராத திருப்பம் நிலைகுலைய செய்யும் நேரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

முதலில் அன்பாகவும், பின்னர் ஆக்ரோஷமாகவும் மாறி மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியாக அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார் மனிஷா யாதவ், சினாமிகா, கேப்ரில்லா, மனோபாலா, மதுமிதா, ரஞ்சன்குமார், சிறப்பு தோற்றம் என்றாலும் முக்கிய திருப்பத்தைத் தரும் ஸ்ரீ பிரியங்கா, ரெடின் கிங்ஸ்லி, வழக்கு எண் முத்துராமன், ரோஹித், துள்ளல் மாணவியாக அழகான புயலாக நடிப்பில் வசீகரிக்கும் யுவலட்சுமி, தோழியாக அயலி அபி நட்சத்திரா, யாசர், பி.எல்.தேனப்பன், தண்டபாணி ஆகியோர் படத்திற்கு பலம்.

ராஜா பட்டாச்சார்ஜி இரு வேறு காலகட்டங்களில் நடக்கும் கதைக்களத்தை சிறப்பாக படம் பிடித்துள்ளார்.

இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தென்றலாக படத்தின் கருப்பொருளுக்கு மிகவும் பொருத்தமானவையாக இருந்தாலும் மனதில் பதியவில்லை.

ஆஷிஷ் தேவையற்ற பாடல் காட்சிகளையும், ரீபீட் காட்சிகளையும் எடிட் செய்திருந்தால் அலுப்பை ஏற்படுத்தாமல் இருந்திருக்கும். கலை இயக்குனர்: முனிகிருஷ்ணா, ஸ்டண்ட் மாஸ்டர்: பிரதீப் தினேஷ்; இருவரும் எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.

நினைவெல்லாம் நீயாடா என்பது முதல் பருவ காதல் மற்றும் அதன்பின் பிரிவினை பற்றிய படம். படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களுக்கு ஆதிராஜ் பொறுப்பேற்று எழுதி இயக்குகிறார். காதலி திடீரென்று சொல்லாமல் ஊரை விட்டு போய் விட்டு; பதினைந்து வருடங்கள் கழித்து சந்தித்து திருமணம் செய்து கொள்வதை பற்றி காதலனை மட்டும் குறை கூறுவது நியாயமாக படவில்லை. திருப்பம் என்ற பெயரில் பெரிய இழுப்பறியாக க்ளைமேக்ஸ் செல்கிறது. அதை இன்னும் நேர்த்தியாக கையாண்டிருந்தால் படத்தின் தோய்வை சரி செய்திருக்கலாம்.

மொத்தத்தில் லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரித்திருக்கும் நினைவெல்லாம் நீயடா காதலின் சுவாசத்தில் மாறுவேட காதலி.