L2: எம்புரான் சினிமா விமர்சனம் : ‘எல் 2: எம்புரான்’ அரசியல் சதுராட்டத்தின் சிலந்தி வலை | ரேட்டிங்: 3/5
ஸ்ரீ கோகுலம் மூவிஸ், ஆசிர்வாத் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கோகுலம் கோபாலன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் லைகா புரொடக்ஷன் ஏ.சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் எல்2:எம்புரான் படத்தை இயக்கியிருக்கிறார் பிருத்விராஜ் சுகுமாரன்.
இதில் மோகன்லால் குரேஷி அபிராம் – ஸ்டீபன் நெடும்பள்ளி, இளம் குரேஷி ஆப்ராம் – ஸ்டீபன் நெடும்பள்ளியாக பிரணவ் மோகன்லால், சயீத் மசூத் ஆக பிருத்விராஜ் சுகமாரன், இளம் சயீத் ஆக கார்த்திகேயா தேவ், பால்ராஜாக அபிமன்யு சிங், ஜதின் ராம்தாஸாக டோவினோ தாமஸ், பிரியதர்ஷினி ராம்தாஸாக மஞ்சு வாரியர், மைக்கேல் மெனுஹினாக ஆண்ட்ரியா திவாடர், போரிஸ் ஆலிவராக ஜெரோம் ஃபிளின், கோவர்த்தனாக இந்திரஜித் சுகுமாரன், இளம் சயீத் ஆக கார்த்திகேய தேவ், கார்த்திக் வேடத்தில் கிஷோர், முன்னாவாக சுகந்த் கோயல், சஜனசந்திரனாக சுராஜ் வெஞ்சாரமூடு, கபுகாவாக எரிக் எபோனே, சுபத்ரா பென்னாக நிகத் கான், அப்பா நெடும்பள்ளியாக ஃபாசில், பெருஞ்சேரி கேசவ ராம்தாஸாக சச்சின் கெடேகர் – “பிகேஆர்”, மகேஷ் வர்மாவாக சாய்குமார், முருகனாக பைஜு சந்தோஷ், பி.எஸ்.பீதாம்பரனாக நந்து, ஜான்வியாக சானியா ஐயப்பன், சத்யஜித் சர்மா மசூத், ஜாகீர் மசூத் ஆக ஓசியேல் ஜிவானி, ஹனியாவாக ஐஸ்வர்யா ஓஜா, சுரையா பீபியாக நயன் பட், பஹிஜா பேகமாக சுபாங்கி லட்கர், ராபர்ட் மெக்கார்த்தியாக அலெக்ஸ் ஓ’நெல், செர்ஜி லியோனோவாக மிகைல் நோவிகோவ், முத்துவாக முருகன் மார்ட்டின், மேடயில் ராஜனாக சிவாஜி குருவாயூர், மணியாக மணிக்கூத்தன், அருந்ததி சஞ்சீவாக நைலா உஷா, சஞ்சீவ் குமாராக கிஜு ஜான், சலாபத் ஹம்சாவாக பெஹ்சாத் கான், சுமேஷாக அனீஷ் ஜி.மேனன், ஸ்ரீPலேகாவாக ஷிவதா, ஜெய்ஸ் ஜோஸ்சாக சேவியர் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள் :- எழுத்தாளர் – முரளி கோபி , ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ், இசை – தீபக் தேவ், எடிட்டர் – அகிலேஷ் மோகன், நிர்வாக தயாரிப்பாளர்கள் – சுரேஷ் பாலாஜே, ஜார்ஜ் பயஸ், திட்ட வடிவமைப்பு – பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – சித்து பனக்கல், கலை இயக்குனர் – மோகன்தாஸ், டிரெய்லர் கட்ஸ் – டான் மேக்ஸ்,முதன்மை இணை இயக்குனர்- வாவா, கிரியேட்டிவ் டைரக்டர் – நிர்மல் சஹாதேவ், ஒலி வடிவமைப்பு – எம் ஆர் ராஜகிருஷ்ணன், நிதிக் கட்டுப்பாட்டாளர் – மனோகரன் கே பையனூர் , அதிரடி – ஸ்டண்ட் சில்வா, ஆடை – சுஜித் சுதாகரன், ஒப்பனை – ஸ்ரீஜித் குருவாயூர், டிஐ – அன்னபூர்ணா ஸ்டுடியோஸ், வண்ண கலைஞர் – விவேக் ஆனந்த், ஸ்டில் – சினாட் சேவியர், வடிவமைப்பு – ஆனந்த் ராஜேந்திரன் (ஒளி கலைஞர்), மக்கள் தொடர்பு – எய்ம் சதீஷ்.
முதல் பாகத்தில் கேரள மாநில முதல்வராக ஐயூஎஃப் கட்சியின் பெருஞ்சேரி கேசவ ராம்தாஸ் (சச்சின் கெடேகர்) என்கிற பிகேஆர் இறப்புக்குப் பிறகு புதிய முதல்வராக அவரது மகன் ஜதின் ராமதாஸ் (டொவினோ தாமஸ்) பதவியேற்கிறார். ஊழல் அவப்பெயரில் திளைக்கும் ஜதின் ராமதாஸிற்கு சகோதரி ப்ரியதர்ஷினி (மஞ்சு வாரியர்) கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். தன் சகோதரியின் பேச்சை கேட்காமல் ஐயூஎஃப் பிகேஆர் என்ற தனி கட்சியை தொடங்கி அகண்ட சக்தி மோக்ஷா கட்சியின் தலைவரான பால்ராஜ் படேல் (அபிமன்யு சிங்) என்ற தேசிய கட்சியுடன் கூட்டணி சேர்வதாக அறிவிக்கிறார். இந்த பால்ராஜ் 2002 ஆம் ஆண்டு அகண்ட சக்தி மோக்ஷா என்ற பெயரில் மத அரசியல் கட்சியை தொடங்கி குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி சயீத் மசூத் (பிருத்விராஜ் சுகுமாரன்) குடும்பத்தை அழித்தவர்.இப்படிப்பட்டவரை தன் கூட்டணியாக சேர்த்த ஜதின் செயலை கேரளா வகுப்புவாத அரசியலில் மூழ்கப் போகிறது என்று அவரது சகோதரி பிரியதர்ஷினி ராம்தாஸ் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறார். இந்நிலையில் ஐந்து வருடங்கள் காணாமல் போன ஸ்டீபன் நெடும்பள்ளி (மோகன் லால்) மீண்டும் தன் சொந்த ஊருக்கு திரும்பி, பிரியதர்ஷினியை காப்பாற்றவும், அவரது தம்பி ஜதினை திருத்தவும் வருகிறார். ஸ்டீபன் இன்னொரு முகம் சர்வதேச டானாக குரேஷி அப்ராம் என்ற பெயரில் சர்வதேச போதைப்பொருள் கும்பல் தலைவனான கபூகா என்பவனை ஈராக்கில் கூண்டோடு அழித்து விட்டு கேரளாவிற்கு வருகிறார். இவரின் வருகையால் கேரளா அரசியலில் ஏற்பட்ட பூகம்பம் என்ன? எதற்காக ராமதாஸ் குடும்பத்திற்கு உதவ வருகிறார்? இவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியம் என்ன? 23 வருடங்களாக பால்ராஜை பழி வாங்க காத்துக் கொண்டிருக்கும் சயீத் மசூத் எண்ணம் நிறைவேறியதா? சயீத்திற்கு உதவியது யார்? என்ற கேள்விகளுக்கு பதில் பாதி இந்த பகுதியிலும் மீதிப் பாதி மூன்றாம் பகுதியில் தொடரும் என்பதுடன் க்ளைமேக்ஸ் முடிகிறது.
மோகன்லால் ஸ்டீபன் நெடும்பள்ளி பிகேஆரின் விசுவாசியாகவும் மற்றும் குரேஷி அப்ராம் சர்வதேச போதை பொருள் கடத்தும் டானாக இரட்டை வேடங்களிலும் அமைதியாக, நிதானமாக யோசித்து பேசுவது, சைகையிலேயே அத்தனை காரியங்களையும் சாதிப்பது, வெளிநாட்டு பாதுகாவலர்களுடன் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்வது என்று அக்மார்க் கதாநாயகனாக மிளிர்கிறார். சண்டை காட்சிகளிலும் சரி, சாதுர்யமாக கடத்துவதிலும் சரி, எதிரிகளிடமிருந்து தப்பிப்பதிலும் சரி அத்தனையையும் சுலபமாக தன் முகபாவனை, பேச்சிலும் உணர்ச்சிகளுடன் திறம்பட செய்து பில்டப் கலந்து அசத்தியுள்ளார்.
பிருத்விராஜ் சுகமாரன் இறுதிக் காட்சிகளில் வந்து தன் நீண்ட கால சபதத்தை தீர்த்துக் கொள்ளும் இடத்திலும், சண்டைக் காட்சிகளிலும் மாஸ் காட்டியுள்ளார்.
ஸ்டைலிஷ் முதல்வராக, வில்லத்தனத்திலும் திமிருடன் செய்து டோவினோ தாமஸ் தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக செய்துள்ளார்.
தந்தையின் வழிகாட்டுதலுடன் பிரியதர்ஷினியாக மஞ்சு வாரியர் தம்பியை எதிர்த்து அரசியல் செய்யும் அக்காவாக, பக்காவாக அரசியல் வசனம் பேசி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் காட்சியிலேயே பயமுறுத்தும் மிரட்டல் வில்லாக பால்ராஜ் பஜ்ரங்கியாக அபிமன்யு சிங், சட்ட அமலாக்க அதிகாரியாக கிஷோர், இவர்களுடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இந்தியா மற்றும் வெளிநாட்டு துணை நடிகர்கள் ஏராளமாக வந்து கதைக்கான பங்களிப்பை துரிதமாக கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர்.
கேரளா, குஜராத், ஈராக், லண்டன், ஆப்ரிக்கா என்று கதைக்களம் பல நாடுகளுக்கு விரிவடையும் போது காட்சிக் கோணங்கள் பிரம்மாண்டத்தை உணர முடிகிறது. அங்கு நடக்கும் சம்பவங்கள், அதற்கு இணையாக இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள், சண்டைக் காட்சிகள் என்று நான் லீனியர் பாணியில் ஒவ்வொன்றும் முன்னுக்கு பின் முரணாக வரும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ள தொழில்நுட்ப கலைஞர்;களான தீபக் தேவின் இசை, பின்னணி இசை, சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு, எடிட்டர் – அகிலேஷ் மோகன், ஆக்ஷன் ஸ்டண்ட் சில்வா, கலை இயக்குனர் – மோகன்தாஸ் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் கடுமையான உழைப்பின் பலனாக பிரம்மாண்டத்தை ஹாலிவுட் தரத்தில் கொடுத்து அசத்தியுள்ளனர்.
எல் 2: எம்புரானில் முரளி கோபியின் எழுத்தும் சித்தரிப்பும் பிரம்மாண்டமாக இருந்தாலும் சரியாக கையாண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பன்முகம் கொண்ட இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன் இந்தப் படத்தில் அரசியல் சூழ்ச்சி, மத அரசியல், சகோதர சண்டை, அரசியல், பழி வாங்குதல், போதைப்பொருள் கடத்தல், சர்வதேச எதிரிகள் என்று பல கிளைக்கதைகளுடன் பல பிரிவுகளாக பிரிந்து நாடுகளை கடந்து கேரளா வரை கொடுத்திருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் பிரம்மாண்ட படைப்பு சினிமா உலகை அதிர வைத்திருக்கும். லூசிஃபர் படம் போலவே, ‘எல் 2: எம்புரான் பகுதி 3 -க்கான லீடுடன் முடித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன்.
மொத்தத்தில் ஆஷிர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர், ஸ்ரீP கோகுலம் மூவிஸ் கோகுலம் கோபாலன் மற்றும் லைகா புரொடக்ஷன் ஏ.சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் ‘எல் 2: எம்புரான்’ அரசியல் சதுராட்டத்தின் சிலந்தி வலை.