ஜோஷ்வா இமை போல் காக்க சினிமா விமர்சனம் : ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அதிர வைத்துள்ளது | ரேட்டிங்: 2.5/5

0
519

ஜோஷ்வா இமை போல் காக்க சினிமா விமர்சனம் : ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அதிர வைத்துள்ளது | ரேட்டிங்: 2.5/5

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’.

இதில் வருண், ராஹேய், கிருஷ்ணா, டிடி, கிட்டி, மன்சூர் அலிகான், விசித்ரா, லிசி ஆண்டனி, நிஷாந்த் ராமகிருஷ்ணன், சாய் சித்தார்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு:- ஒளிப்பதிவு : எஸ்ஆர் கதிர் ஐஎஸ்சி, எடிட்டிங் : ஆண்டனி, இசை : கார்த்திக், கலை இயக்குனர் : குமார் கங்கப்பன், ஆடைகள் : உத்தாரா மேனன்பாடல் வரிகள் : மதன் கார்க்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா, ஸ்டண்ட் : யானிக் பென், நிர்வாகத் தயாரிப்பாளர் : கே அஸ்வின் குமார், வண்ணம் : ஜி பாலாஜி, ஒலி வடிவமைப்பு : சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன்,ஒலி கலவை : சுரேன் ஜி, மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, நாசர், டிஒன்

ஜோஷ்வா (வருண் கமலக்கண்ணன்) கூலிக்காக கொலை செய்யும் கொலைகாரன். சென்னையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்காவில் வழக்கறிஞராக இருக்கும் குந்தவியை (ராஹி) சந்தித்துப் பழகி யாரென்று தெரியாமலேயே காதலில் இருவரும் விழுகிறார்கள். அமெரிக்காவிற்கு குந்தவி புறப்பட்டு செல்லும் முன் தன் காதலை சொல்லுவதோடு தான் யார் என்ற உண்மையையும் சொல்கிறார் ஜோஷ்வா. இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் குந்தவி தன்னிடம் எந்த வித தொடர்பும் வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு பிரிந்து செல்கிறார். சில வருடங்களுக்குப் பின், உலகளவில் பிரபலமான மெக்சிகன் போதைப் பொருள் கடத்தும் குற்றவாளி லெகிசியாமோ என்பவருக்கு எதிராக வழக்காடப் போகும் வழக்கறிஞர் குந்தவியைக் கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த இடைப்பட்ட சமயத்தில் சென்னையில் ஜோஸ்வா தன் காதலியிடம் கொடுத்த வாக்குறுதிப்படி கொலைகளை செய்வதை விட்டு விட்டு பாதுகாப்பு கொடுக்கும் வேலையை மாதவி (திவ்யதர்ஷினி)) தலைமையில் சிறப்பு பாதுகாப்பு குழுவில் இடம்பெறுகிறார். சென்னைக்கு வேலை விஷயமாக வரும் குந்தவி திரும்பி அமெரிக்காவிற்கு செல்லும் வரை  பாதுகாக்கும் பொருப்பு தற்போது பாதுகாப்பு வீரராக இருக்கும் ஜோஷ்வாவிடம் வருகிறது. அதன் பின் பல கேங்;ஸ்டர்கள் டார்கட் லிஸ்டில் இருக்கும் தன் காதலி குந்தவியை ஜோஸ்வா எப்படி தன் கண் இமை போல் காத்து அமெரிக்காவிற்கு அனுப்புகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜோஷ்வா என்ற பட டைட்டில் ரோலில் வருண் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக செய்திருந்தாலும், உணர்ச்சிகள் நிறைந்த காதல் காட்சிகளில், காதலர்களின் கெமிஸ்டிரியில் கொஞ்சம் சறுக்கலாகத்தான் நடித்துள்ளார்.

வழக்கறிஞர் குந்தவியாக ராஹேய் புதிய வரவு என்றாலும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் காதலியாக முடிந்தவரை வசனத்திலும், காதல் காட்சிகளிலும் மிதமாக செய்துள்ளார்.

லோக்கல் கேங்ஸ்டராக கிருஷ்ணா முதலில் கெத்து காட்டினாலும் பின்னர் அவரின் ரோல் குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் திருப்பம் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு காணாமல் போகிறது.

மாதவியாக டிடி பாதுகாப்பு குழுவில் தலைவியாக இருந்து ஆபத்து நேரும் போதெல்லாம் தோன்றி காப்பாற்றும் ரோலில் அதிரடியாக செய்து அசத்தியுள்ளார். வில்லனாக தந்தை கிட்டி மற்றும் மன்சூர் அலிகான், விசித்ரா, லிசி ஆண்டனி, நிஷாந்த் ராமகிருஷ்ணன், சாய் சித்தார்த் ஆகியோர் வந்து போகிறார்கள்.

யானிக் பென் சிறப்பாக வடிவமைத்துள்ள ஆக்‌ஷன் காட்சிகளில் வருண் சிறப்பாக நடித்துள்ளார் என்பதைச் சொல்ல வேண்டும்.

ஜிவிஎம் திரைப்படங்கள் எப்போதுமே; இசைக்கு பெயர் பெற்றவை, அதற்கேற்ப கார்த்திக்கின் இசையும் பின்னணி இசையும் சில இடங்களில் தாங்கி பிடித்திருக்கிறது.

கதிரின் ஒளிப்பதிவு காட்சிகள் சண்டைக்காட்சிகள், துரத்தல் காட்சிகளில் உலகத்தரம்.

ஆண்டனி எடிட்டிங் பரவாயில்லை ரகம்.

கௌதம் வாசுதேவ் மேனனின் முந்தைய படங்கள் தாக்கத்தை இந்த ஜோஷ்வா படத்தில் உணர முடியாதது குறை. இந்தப் படத்தின் மிகப்பெரிய குழப்பம் இது காதல் கதையா அல்லது அதிரடி ஆக்ஷன் கதையா என்று நிதானமாக யோசித்து முடிப்பதற்குள் இரண்டும் கலந்த கலவையாக படம் முடிந்து விடுகிறது. அன்பு, வன்முறை கலந்த காதல் கதையில் பாதுகாப்பு, ஆக்ஷன் கலந்து தனக்கே உரித்தான ஸ்டைலிஷாக கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன்.

மொத்தத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அதிர வைத்துள்ளது.