பைரி பாகம் -1 சினிமா விமர்சனம் : பைரி பாகம் – 1 பந்தயப் புறாவின் ரணகள டைரிக்குறிப்பு | ரேட்டிங்: 3/5

0
206

பைரி பாகம் -1 சினிமா விமர்சனம் : பைரி பாகம் – 1 பந்தயப் புறாவின் ரணகள டைரிக்குறிப்பு | ரேட்டிங்: 3/5

வி.துரை ராஜ் தயாரித்திருக்கும் பைரி பாகம் – 1 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜான் கிளாடி

இதில் சையத் மஜீத் – ராஜலிங்கம், மேகனா எலன் – ஷரோன், விஜி சேகர் – சரஸ்வதி (அம்மா), ஜான் கிளாடி – அமல், சரண்யா ரவிச்சந்திரன் – சித்ரா, ரமேஷ் ஆறுமுகம் – ரமேஷ் பண்ணையார், வினு லாரன்ஸ் – சுயம்பு, ஆனந்த் குமார் – திருமால் (ராஜலிங்கம் அப்பா),கார்த்திக் பிரசன்னா – வில்லியம், பிரான்சிஸ் கிருபா – ரவிச்சந்திரன் (சித்ரா அப்பா), ராஜன் – அமல் அப்பா ஆகியோர் அந்தந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் :இசையமைப்பாளர் – அருண்ராஜ், எடிட்டர் – ஆர்.எஸ்.சதீஷ் குமார், ஃபைட் மாஸ்டர் – விக்கி, கலை இயக்குனர் – அனிஷ், நடனம் – ஸ்ரீகிருஷ், ஒலி வடிவமைப்பு – ராஜா நல்லையா, ஆடை வடிவமைப்பு – தினேஷ், ஒப்பனை – குமரேசன், பாடல் வரிகள் – கார்த்திக் நேதா, மோகன் ராஜன், பொன் மனோபன், இணை இயக்குனர் – கங்கா ராம், இணை இயக்குனர் – எஸ்.பன்னீர்செல்வம், நிர்வாக தயாரிப்பாளர் – பொன் மனோபன், தினேஷ் குமார், ஸ்டில்ஸ் – ஏ.ஜே.ஜோவி, தயாரிப்பு மேலாளர் – எஸ்.மாரியப்பன், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

பைரியின் கதை நாகர்கோவிலில் உள்ள அறுகுவிளை என்ற சிறிய கிராமத்தில் தொடங்குகிறது. அந்த கிராமத்தில் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் ஒவ்வொரு ஆண் உறுப்பினரும் புறா பந்தயத்தில் ஈடுபடுபவர்கள். இங்குள்ளவர்கள் தங்கள் முழு நேரத்தையும் பறவைகள் இனப்பெருக்கம் மற்றும் பந்தயத்தில் செலவிட்டு ஆர்வத்துடன் கோப்பைகள் மற்றும் பட்டங்களை வெல்வது பெருமைக்குரிய விஷயமாக கருதுபவர்கள் இதற்காக சண்டைகள், அடிதடி, குத்து கொலைவரை செல்வதற்கு அஞ்சாவர்கள். அந்த கிராமத்தில் சரஸ்வதி (விஜி சேகர்) புறா வளர்த்து பந்தய விளையாட்டின் அடிமைத்தனத்தை அறிந்து ஆண்கள் அழிவதை நேரில் கண்டவர் என்பதால் தன் பட்டதாரி மகனான ராஜலிங்கம் (சையத் மஜீத்); புறாக்களை வளர்ப்பதிலும் பந்தயத்தில் ஈடுபடுவதையும் எதிர்க்கிறார். தன் மகன் அதற்கு இரையாகி தன் உயிரை இழக்கக் கூடாது என்பதற்காக புறா வளர்ப்பதில் இருந்து அவனைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறார். படித்த படிப்பிற்கான வேலையில் சேருமாறு வற்புறுத்துகிறார். தாயின் எதிர்ப்பு, திட்டுக்களையும் மீறி லிங்கம் எதற்கும் கவலைப்படாமல் புறாக்களை வளர்ப்பதற்கான வழியைத் தேடுகிறார். புறா கூடு கட்டவும், பறவைகளை வளர்க்கவும் லிங்கம் நெருங்கிய பால்ய நண்பர் அமலின் (ஜான் கிளாடி)  உதவியைப் பெறுகிறார். இந்நிலையில், அப்பகுதியில் ரமேஷ் பண்ணையார் (ரமேஷ் ஆறுமுகம்) நடத்தும் புறா ரேஸ் போட்டி வருகிறது. அப்பகுதியில் சில கொலைகளை செய்து பெரும் ரௌடியாக சுற்றி வருகிறார் சுயம்பு (வினு லாரன்ஸ்). புறா பந்தயத்தில் சுயம்பு செய்யும் மோசடியை லிங்கம் கண்டுபிடித்து தட்டிக் கேட்கிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அப்போது சுயம்பு கலந்து கொள்ளும் புறா போட்டியின் போது லிங்கமும் இணை போட்டியாளராக வருகிறார். இருவருக்குள்ளும் இருக்கும் பகை சண்டையாகி விடுகிறது. சுயம்புவின் கோபம் லிங்கத்தின் மீது திரும்புகிறது. அதன் பின் என்ன நடக்கிறது, என்பதே படத்தின் மீதிக்கதை.

சையத் மஜீத் துணிச்சலான, உணர்ச்சிகள் நிரம்பிய இளைஞனாக லிங்கம் ஆக்ரோஷத்துடன் காட்சிகளில் பெரிய அதிர்வை கொடுக்கிறார். சையத் மஜீத் தனது பாத்திரத்தில் பிரகாசிக்கிறார், பார்வையாளர்களைக் கவரும் ஒரு அழுத்தமான நடிப்பை வழங்குவதோடு கோபத்தை வெளிப்படுத்தும் அதே சமயம் நண்பர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் விதம் சுவாரசியமானது.

சரண்யா ரவிச்சந்திரன், மேகனா எலன் மற்றும் ஜான் கிளாடி உள்ளிட்ட குழும நடிகர்களும் மாறுபட்ட கதாபாத்திரங்களை சித்தரிப்பதன் மூலம் கவனம் பெறுகிறார்கள். சரஸ்வதி அம்மாவாக நடித்துள்ள விஜி சேகர் உருட்டல் மிரட்டல் என்று அதட்டியிருக்கிறார். கொலைகாரன் மற்றும் கேங்ஸ்டர் சுயம்புவாக வினு லாரன்ஸ் ஈர்க்கிறார்.

சிறப்பான நடிப்பு ரமேஷ் ஆறுமுகத்தினுடையது, அவர் ரமேஷ் பண்ணையாராக கச்சிதமாக நடித்துள்ளார். அமைதியான உறுதியான, ரமேஷின் செயல்திறன் மற்றும் குணாதிசயங்கள் இதயத்தை வெல்லும்.அமலாக நடித்த இயக்குனர் ஜான் கிளாடியும் தன் பங்கிற்கு வேலையைச் செய்திருக்கிறார். அதே சமயம் பல புதிய நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த குமாரின் காட்சிகள் பொருத்தமானதாகவும் மற்றும் இயக்குனர் ஜான் கிளாடி தனது கதையை நம்பத்தகுந்த மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் விவரிக்க உதவுகின்றன.

தொழில்நுட்ப ரீதியாக, இசையமைப்பார் அருண்ராஜ் பின்னணி ஸ்கோர் கொஞ்சம் காட்சிகள் மிகவும் சத்தமாக இருப்பது போன்ற உணர்வைப் தருகிறது.

பைரி டைட்டிலின் பெயர் காரணம் புறாவை இறைக்காக வேட்டையாடும் ஒருவகை கழுகின் பெயர். இயக்குனர் ஜான் கிளாடி, புறா பந்தயத்தின் பின்னணியில் உள்ள அரசியலையும் அது மக்களை உளவியல் ரீதியாக எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் சுவாரஸ்யமாக சித்தரித்துள்ளார். இந்தப் படத்தில் வன்முறை மற்றும் இரத்தக்களரி அதிகம். இயக்குனர் ஜான் கிளாடி, சஸ்பென்ஸையும் புறா பந்தயத்தையும் தடையின்றி ஒன்றாக இணைத்து கதைக்களத்தை திறமையாக கையாண்டதற்காக பாராட்டுக்கு உகந்தவர்.  முதல் பாதி வரை இயக்குனர் ஜான் கிளாடி கதைக்களத்திற்கான அடித்தளத்தை அமைத்து முடித்தவுடன், கதையை உணர்ச்சியுடன் விவரிக்கத் தொடங்குகிறார், அதன் பின் தான் இரண்டாம் பாதியில் பைரி ஒரு எக்ஸ்பிரஸ் போல வேகத்தை உயர்த்தி ஒவ்வொரு நிமிடமும் தீவிரம் பெறுகிறது. இந்த கட்டத்தில்தான் படத்தின் தொடக்கத்தில் காண்பிக்கப்பட்ட விளையாட்டு மற்றும் பிராந்தியத்தைப் பற்றிய தகவல்களை உணர்வீர்கள். வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவற்றால் நிரப்பப்படும் விளையாட்டு எவ்வளவு அழிவுகரமானது மற்றும் ஒரு பொறுமையற்ற அறிக்கை அல்லது செயல் எவ்வாறு வாழ்க்கையை அழிக்கக்கூடும் என்பதை படம் சுட்டிக்காட்டுகிறது. புறாவைப் பற்றிய டிட்டைல்ட் கதைக்களம் இதுவாகத்தான் இருக்கும்.  அதே சமயம் சிஜி தொழில்நுட்பத்தையும் திறமையாக கையாண்டுள்ளனர்.

மொத்தத்தில் வி.துரை ராஜ் தயாரித்திருக்கும் பைரி பாகம் – 1 பந்தயப் புறாவின் ரணகள டைரிக்குறிப்பு.