பிகினிங் விமர்சனம் : பிகினிங் முதல் படி அடியெடுத்து வைத்து வித்தியாசமான முயற்சியில் தனி முத்திரை பதித்திருக்கும் படம் | ரேட்டிங்: 2.5/5

0
311

பிகினிங் விமர்சனம் : பிகினிங் முதல் படி அடியெடுத்து வைத்து வித்தியாசமான முயற்சியில் தனி முத்திரை பதித்திருக்கும் படம் | ரேட்டிங்: 2.5/5

லெஃட்டி மேனுவேல் க்ரியேஷன்ஸ் சார்பில் விஜயா முத்துசாமி தயாரித்து பிகினிங் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெகன் விஜயா.
இதில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி, லகுபரன், மகேந்திரன், சுருளி, குக்வித்கோமாளி பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-சுந்திரமூர்த்தி, ஒளிப்பதிவு-வீரகுமார், எடிட்டர்-சி.எஸ்.பிரேம்குமார், கலை-கே.வி.முருகமணி,நடனம்-தினேஷ், தயாரிப்பு நிர்வாகி-மாரியப்பன் கணபதி, இணை தயாரிப்பு-பிரபாகரன் நாகரத்னம், சுப்ரமணி பிரபாகரன், கோபி அண்ணா, பொன்னி பிரபு, பிஆர்ஒ-ஜான்சன்.

ஆசியாவின் முதல் ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் திரைப்படம் என்ற பெருமையைத் தாங்கிய புது முயற்சியாக வெளிவந்திருக்கிறது பிகினிங்’ (Split Screen).உலக அளவில் பல ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் (Beginning) திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும்,இது இந்தியாவில் தமிழ் திரையுலகில் வந்திருக்கும் முதல் முயற்சி என்ற பெருமையை பெறுகிறது. ஒரே திரையில் இடதுபுறமும், வலதுபுறமும் வெவ்வேறு கதைளத்தை காண்பிப்பதே ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் திரைப்படமாகும்.

இடது புறம் ஆட்டிசம் பாதித்த வினோத் கிஷன் தன் தாய் ரோகிணியுடன் வசித்து வருகிறார். வேலைக்குச் செல்லும் ரோகிணி தன் மகனுக்கு உணவு சமைத்து கொடுத்துவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு தினமும் செல்வது வழக்கமாக வைத்திருக்கிறார். ரோகிணி அவசர உதவி தேவைப்பட்டால் அழைப்பதற்கு தன் நம்பரை பதிவு செய்து சாதாரண தொலைபேசியை மகனிடம் கொடுத்து வைத்திருக்கிறார்.

வலதுபுறம் கௌரி கிஷனை மயக்க மருந்து கொடுத்து தன் நண்பர்கள் இரண்டு பேருடன் சச்சின் கடத்தி ஒரு வீட்டு அறையில் அடைத்து வைக்கிறார். மயக்கம் தெளிந்தவுடன் சூழ்நிலை ஆபத்தை அறிந்து கௌரி கிஷன் தப்பிக்க வழி தேடுகிறார். அந்த அறையில் இருக்கும் மேஜையை ஆராய்ந்து பார்க்கும் போது பழைய சாதாரண அலைபேசி கிடைக்க அதை வைத்து கிடைத்த நம்பருக்கு போன் செய்ய அது வினோத் கிஷன் தொலைபேசிக்கு செல்கிறது. கௌரி கிஷன் ஆபத்தில் மாட்டிக் கொண்டிருப்பதை சொல்ல முயற்சிக்க, அதை புரிந்து கொள்ளும் மனநிலை இல்லாத வினோத் கிஷனால் எந்த உதவியும் செய்ய முடியாமல் போகிறது. பின்னர் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்து நிலைமையை புரிய வைக்க முயற்சிக்கிறார். வினோத் கிஷனால் ஒரளவு புரிந்து கொண்டு உதவ நினைத்தாலும் வெளியே வரமுடியாத சூழ்நிலையால் தவிக்கிறார். இறுதியில் கௌரி கிஷனை காப்பாற்றினாரா? வினோத் கிஷன் அதற்காக என்ன செய்தார்?  கௌரி கிஷனை சச்சின் என்ன செய்தார்? கடத்திய சச்சின் நிலைமை என்ன ஆனது? என்பதே இறுதியில் ஒரே திரையில் இணையும் கதைக்களம்.

பாலசுப்பிரமணியாக வினோத் கிஷன் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு தத்ரூபமாக திக்கி திணறி ஒரேவார்த்தையை இருமுறை பேசும் கதாபாத்திரம் வெகுளித்தன்மை, பயம், உதவும் மனப்பான்மை, உடல்மொழி, குழந்தைத்தனம், கோபம் என்று அத்ததை பரிணாமங்களையும் உள்ளடக்கி தனி முத்திரை பதித்திள்ளார்.

நித்யாவாக கௌரி கிஷன் கடத்தப்பட்டவுடன் தப்பிக்க முயற்சி செய்வது, இயலாமையை கண்டு கத்துவது, பின்னர் சூழ்நிலைக்கேற்றவாறு யோசனை செய்து முயற்சிப்பது, பின்னர் வில்லனிடம் மாட்டிக் கொண்டு தவிப்பது, அவனை இறுதியில் பழிவாங்கி தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுவது என்று படம் முழுவதும் ஆக்ரமிப்பு செய்து அசத்தியுள்ளார்.

வில்லன் சந்துருவாக சச்சின் அமைதியாக வந்து சிரிப்பிலும், மிரட்டலிலும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

தாய் அற்புதமாக ரோகிணி முதல் சில காட்சிகளிலும், இறுதிக்காட்சியிலும் தன் பங்களிப்பை கச்சிதமாக  கொடுத்து விட்டு செல்கிறார்.

மற்றும் லகுபரன், மகேந்திரன், சுருளி, குக்வித்கோமாளி பாலா ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக வந்து விட்டு போகின்றனர்.

சுந்திரமூர்த்தியின் இசையும், வீரகுமாரின் ஒளிப்பதிவும் இருகதைகளின் ஒட்டத்திற்கு துணை புரிந்து சிறப்பு செய்துள்ளதால், படத்தின் புரிதலுக்கும் வழி வகை செய்துள்ளனர்.

எடிட்டர்-சி.எஸ்.பிரேம்குமாரின் உழைப்பு தான் முக்கியமானது, எந்த ஒரு இடத்திலும் அலுப்பு ஏற்படாதவாறும் காட்சிகளை கொடுத்துள்ளார். இரு பிளாட்டில் நடக்கும் கதைக்களத்திற்கு ஏற்றவகையில் இயல்பு மாறாமல் நம்பகத்தன்மையோடு அமைத்துள்ளார் கலை இயக்குனர் கே.வி.முருகமணி.

ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் திரைப்படத்தை முதல் முதலாக இயக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் ஜெகன் விஜயா.ஒரு சில கதாபாத்திரங்ளை வைத்துக்கொண்டு இரு வேறு கதைகள், ஒரே திரையில் பயணிக்க, படம் பார்ப்பவர்களுக்கு புரியும் வண்ணமும், ஒரு காட்சியில் நடக்கும் சம்பவங்களை கவனிக்கும் போது மற்றொரு கதையில் முக்கிய காட்சிகளில் சில இடங்களில் அமைதி காத்து, க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரே திரையாக காண்பித்து தன்னுடைய தனித்திறமையால் தெளிவாக இயக்கி கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் ஜெகன் விஜயா. வெல்டன்.

மொத்தத்தில் லெஃட்டி மேனுவேல் க்ரியேஷன்ஸ் சார்பில் விஜயா முத்துசாமி தயாரித்திருக்கும் பிகினிங் முதல் படி அடியெடுத்து வைத்து வித்தியாசமான முயற்சியில் தனி முத்திரை பதித்திருக்கும் படம்.