80’s Buildup சினிமா விமர்சனம் :
’80களின் பில்டப்’ சிரிக்க வைக்க முடிந்தவரை முயற்சித்திருக்கிறார்கள் | ரேட்டிங்: 2.5/5
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும ’80களின் பில்டப்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கல்யாண்.
இப்படத்தில் சந்தானம், ராதிகா ப்ரீத்தி, கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மயில்சாமி, முனிஷ்காந்த், சுந்தர்ராஜன், தங்கதுரை, ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், சுவாமிநாதன், தங்கதுரை, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்: எஸ்.கல்யாண் – எழுத்தாளர், செல்வி. ஆனந்த் – தயாரிப்பாளர், நேஹா ஞானவேல்ராஜா – இணை தயாரிப்பாளர், ஜிப்ரான் – இசையமைப்பாளர், ஜேக்கப் ரத்தினராஜ் – டிஓபி, ஏ.ஆர். மோகன் – கலை இயக்குனர், தினேஷ் மாஸ்டர், ராக் ஷங்கர் – நடன இயக்குனர், எம்.எஸ் பாரதி – எடிட்டிங், மக்கள் தொடர்பு – சதீஷ்
கதிர் (சந்தானம்) தீவிர கமல் ரசிகர் மற்றும் ஒரு பெரிய ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். கதிர் (சந்தானம்) மற்றும் அவரது சகோதரி மஞ்ச கிளி (சங்கீதா) சிறு வயது முதல் எலியும் புனையும் போல எப்போதும் மோதிக்கொண்டு சவால் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சுந்தர் ராஜன் இவருடைய தாத்தா. ஒரு நாள், ஒரு திருடர் கும்பல் அவர்களின் வீட்டில் பாரம்பரியமான வாளைத் திருடத் திட்டமிடுகிறது. சுந்தர் ராஜன் திருட்டுக்கும்பல் வைத்திருந்த வைரங்களை தற்செயலாக சாப்பிட்டு பின்னர் இறந்துவிடுகிறார்.சுந்தர் ராஜனின் உடலில் இருந்து வைரங்களை எப்படியாவது மீட்டெடுக்க திருட்டுக்கும்பல் காத்திருக்கிறது.இதற்கிடையில், சுந்தர் ராஜனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வரும் தூரத்து உறவினர் ராதிகா ப்ரீத்தியை பார்த்தவுடன் சந்தானம் காதலிக்கிறார்.இறுதிச் சடங்கிற்கு முன் ராதிகாவை காதலிக்க வைப்பதாக சகோதரி சங்கீதாவிடம் சந்தானம் பந்தயம் கட்டுகிறார். இறுதிச் சடற்கு நடைபெறுவதற்குள் சந்தானம் தனது காதலில் வெற்றி பெற்றாரா? ராதிகா ப்ரீத்தி காதலை ஏற்றுக் கொண்டாரா? திருட்டு கும்பலிடம் வைரம் மற்றும் வாள் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.
சந்தானம் வித்தியாசமாக எதையும் முயற்சி செய்யவில்லை அவருடைய ஒன் லைனர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வொர்க் அவுட் ஆகிறது. மற்றபடி கமல் ரசிகராக சில மேனரசிங்களை செய்வதுடன் படத்தில் காதலை ஜெயிக்க வைக்க முயற்சி மட்டுமே செய்கிறார்.
ராதிகா ப்ரீத்தி தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன்;, மன்சூர் அலி கான், மொட்டை ராஜேந்திரன், மனோ பாலா கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கூல் சுரேஷ், சுவாமிநாதன், தங்கதுரை, மயில்சாமி, எனப் பலர் நகைச்சுவைக்காக தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.ஆடுகளம் நரேன் மற்றும் பெண் வேடத்தில் வரும் ஆனந்த் ராஜின் காம்போ முகம் சுளிக்க வைக்கிறது.
ஜிப்ரானின் இசை நன்றாக உள்ளது மற்றும் பின்னணி இசையும் படத்தின் கருப்பொருளுக்கு பொருந்துகிறது.
ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு, வண்ணமயமான 80களின் காலகட்டத்தை பிரதிபலித்து படத்தை வழங்கியுள்ளது அற்புதமாக உள்ளது.
ஒரு மரண வீட்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்தும், அண்ணன் தங்கை மோதலுடன் காதலை இணைத்து இயக்குனர் கல்யாண் கதையை உருவாக்கியுள்ளார். கதையின் கரு நன்றாக இருந்தாலும், அதை செயல்படுத்திய விதத்தை இன்னும் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். மரண வீட்டில் நகைச்சவை என்ற பெயரில் அனைவரும் செய்யும் கோமாளித்தனங்கள் பார்க்கும்படி இல்லை எனலாம்.
மொத்தத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் ’80களின் பில்டப்’ சிரிக்க வைக்க முடிந்தவரை முயற்சித்திருக்கிறார்கள்.