7ஜி சினிமா விமர்சனம் : 7ஜி பயமுறுத்தாத பொழுதுபோக்கு கலந்த ஹாரர் த்ரில்லரை ஒரு முறை பார்க்கலாம் | ரேட்டிங்: 2.5/5
ட்ரீம் ஹவுஸ் சார்பில் தயாரித்து 7ஜி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹாரூன்,
இதில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், ஸ்நேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள்:- ஒளிப்பதிவு: கண்ணா, எடிட்டர்: பிஜு.வி.டான் போஸ்கோ ,இசை: சித்தார்த் விபின், ஸ்டண்ட்: ஃபயர் கார்த்திக், மேக் அப்: பி மாரியப்பன், பாடல்கள்: மோகன் ராஜா, குட்டி ரேவதி, பாடகர்கள் : சைந்தவி, பிரியங்கா, ரீட்டா, தியாகராஜன், லோகேஷ், நடன அமைப்பு : ரிச்சி ரிச்சர்ட்சன், தயாரிப்பு நிர்வாகி : கேஎஸ்கே.செல்வா, தயாரிப்பு மேலாளர் : ஜெகதீஷ், பிஆர்ஒ : சதீஷ் (ஏய்ம்)ஐடியில் வேலை செய்யும் கணவர் ராஜீவ் (ரோஷன் பஷீர்) மனைவி வர்ஷாவிற்காக (ஸ்ம்ருதி வெங்கட்) அடுக்குமாடி குடியிருப்பில் 7ஜி என்ற கதவு எண் கொண்ட வீட்டை பரிசாக வாங்கி கொடுக்கிறார்.புதிய வீட்டிற்குச் சென்றவுடன் ராஜீவிற்கு பதவி உயர்வு கிடைக்க, அதற்காக பெங்களுரில் பயிற்சி எடுக்க சென்று விடுகிறார். வர்ஷாவும் அவரது இளம் மகன் ராகுலும் அந்த புதிய வீட்டில் திகிலூட்டும் அமானுஷ்ய நடவடிக்கைகளை காண்கிறார்கள். அப்போதுதான் வர்ஷாவும் தன் மகனும் அந்த பிளாட்டில் தனியாக இல்லை என்பதையும் சுற்றிலும் ஆவிகள் நடமாட்டம் இருப்பதை உணர்கிறாள். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சுப்ரமணியம் சிவா குடும்பமும் உண்மையை மறைக்கின்றனர். தினமும் நடக்கும் அமானுஷ்ய பயமுறுத்தல்களை வர்ஷா எப்படி எதிர்கொண்டார்? வீட்டை விற்று விட்டுச் சென்றாரா? அல்லது வீட்டிலிருந்த பயமுறுத்தும் ஆவியை விரட்டினாரா? வர்ஷாவை மிரட்டும் ஆவி யார்? எதற்காக? வர்ஷா என்ன செய்தார்? என்பதே படத்தின் முடிவு.
சோனியா அகர்வால் மஞ்சுளாவாக பயமுறுத்தும் ஆவியாக, தன்னை கொலை செய்தவர்களை பழி வாங்க துடிப்பதும், ஆக்ரோஷத்தையும், பயமுறுத்தலையும் ஒரு சேர கொண்டு வந்து அவர்களை அழிக்கும் தருணங்களும், வர்ஷாவிடம் அன்பாக நடந்து கொண்டு, உதவி கேட்கும் நல்ல ஆவியாக சிறந்த நடிப்பின் மூலம் தனது நடிப்புத் திறனை சிறிதும் இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஸ்ம்ருதி வெங்கட் வர்ஷாவாக துணிச்சல் நிறைந்த பெண்ணாக தன்னையும், தன் மகனையும் காத்து கொள்ள எடுக்கும் முயற்சி, அதன் பின் ஆவியின் நிலையை அறிந்து அதற்கு உதவி செய்வதும், கணவனையும் அரவணைத்து நடந்து கொண்டு, தைரியத்துடன் அனைத்தையும் எதிர் கொள்ளும் மனவலிமையான கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில், தன் வீட்டில் என்ன நடக்கிறது, எப்படி பிரச்சினையை தீர்ப்பது என்று யோசித்து செயல்படுவது சிறப்பு. சோனியா அகர்வால் மற்றும் ஸ்மிருதி வெங்கட் இருவரும் தான் படத்தின் பிரதானமாக வந்து கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.
வில்லனாக சித்தார்த் விபின் சபல புத்தியும், சூதாட்ட பிரியராகவும், பணத்தேவைக்காக பாதக செயலை செய்வது என்று மிரட்ட நினைத்தாலும் எடுபடவில்லை.
இவர்களுடன் ஸ்நேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கிராஜா உட்பட அனைத்து துணை கலைஞர்களிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்துள்ளது.
சித்தார்த் விபின் படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். கண்ணனின் ஒளிப்பதிவு மற்றும் பிஜு வி டான் போஸ்கோவின் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளது.
புதிய குடியிருப்பில் ஒரு இளம் குடும்பம் திகிலூட்டும் அமானுஷ்ய நடவடிக்கைகளை எதிர்கொள்வதை சூனியம், நிராகரிக்கப்பட்ட காதல் மற்றும் பழிவாங்கும் ஆவிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பொழுது போக்கு நிறைந்த ஹாரர் த்ரில்லரை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹாரன். பழிவாங்கலை மையமாகக் கொண்ட மற்ற திகில் படங்களைப் போலல்லாமல், 7ஜியின் சதி, தன் காதலனை மணந்த பெண்ணின் குடும்பத்தையும் மன அமைதியையும் கெடுக்கும் ஒரு நிராகரிக்கப்பட்ட பெண் சூனியம் வைப்பதை சுற்றி வருகிறது என்று முதலில் உங்களை நம்ப வைப்பதும், சூனியத்தில் நிபுணராக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குருஜி, முதல் பாதியில் அதிக குழப்பத்தை ஏற்படுத்திய ஒரு குருஜி, க்ளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சியில் நகைச்சுவையாக காட்டப்படுவதும் என்று படத்தின் காட்சிகளின் திசையை திருப்பி இறுதியில் வழக்கமான பழிவாங்கும் நாடகமாக மாற்றினாலும் போரடிக்காமல், பயமுறுத்தாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹாரன். ஆண்களை விட பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, படம் முழுவதும் நகர்புறத்தில் நடப்பது போன்று அமைத்து முடிந்தவரை சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளார் ஹாரன்.
மொத்தத்தில் ட்ரீம் ஹவுஸ் சார்பில் இயக்குனர் ஹாரன் தயாரித்திருக்கும் 7ஜி பயமுறுத்தாத பொழுதுபோக்கு கலந்த ஹாரர் த்ரில்லரை ஒரு முறை பார்க்கலாம்.