ஹிட்: தி தேர்ட் கேஸ் (HIT The Third Case) சினிமா விaமர்சனம் : ஹிட்: தி தேர்ட் கேஸ் வன்முறை தெறிக்கும், அதிரடி ஆக்ஷன், மாஸ் கலந்த த்ரில்லிங் வெற்றியின் மூலம் பான் இந்தியா அடையாள சின்னமாக மாறும் | ரேட்டிங்: 3/5

0
552

ஹிட்: தி தேர்ட் கேஸ் (HIT The Third Case) சினிமா விமர்சனம் : ஹிட்: தி தேர்ட் கேஸ் வன்முறை தெறிக்கும், அதிரடி ஆக்ஷன், மாஸ் கலந்த த்ரில்லிங் வெற்றியின் மூலம் பான் இந்தியா அடையாள சின்னமாக மாறும் | ரேட்டிங்: 3/5

வால் போஸ்டர் சினிமா மற்றும் யூனானிமஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரசாந்தி திப்பிரிநேனி – நானி தயாரித்திருக்கும் ஹிட்: தி தேர்ட் கேஸ் படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார் சைலேஷ் கோலானு.

இதில் நானி – எஸ்.பி. அர்ஜுன் சர்கார், ஐ.பி.எஸ். (ஹிட், விசாகப்பட்டினம்),ஸ்ரீநிதி ஷெட்டி – மிருதுளா, சூர்யா​ ஸ்ரீநிவாஸ் – ஏ.எஸ்.பி. ரவி, ஐ.பி.எஸ். (ஹிட், ஜம்மு – காஷ்மீர்), அதில் பாலா – எஸ்.ஐ. சுபைர் அகமது கான் (ஹிட், ஜம்மு – காஷ்மீர்), ராவு ரமேஷ் – டி.ஜி.பி. நாகேஸ்வர ராவு, ஐ.பி.எஸ். (ஹிட், விசாகப்பட்டினம்), சமுத்திரகனி- அர்ஜுன் சர்காரின் தந்தை, கோமளி பிரசாத் – ஏ.எஸ்.பி. வர்ஷா, ஐ.பி.எஸ். (ஹிட்,விசாகப்பட்டினம்), மகந்தி ஸ்ரீநாத் – எஸ்.பி. அபிலாஷ், ஐ.பி.எஸ். (ஹிட், ஹைதராபாத் கேமியோ தோற்றம்), ரவீந்திர விஜய் – சாமுவேல் ஜோசப், பிரதீக் பாபர் – ஆல்பா (முக்கிய எதிரணி), அமித் சர்மா – ஆல்பாவின் சகோதரர், அதிவி சேஷ் – எஸ்.பி. கிருஷ்ணா தேவ் “கே.டி.” ஐ.பி.எஸ். (கேமியோ தோற்றம்), கார்த்தி – ஏ.சி.பி. வீரப்பன் (கேமியோ தோற்றம்) ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள்:- இசை – மிக்கி ஜே. மேயர், படத்தொகுப்பாளர் -கார்த்திகா ஸ்ரீPனிவாஸ், ஒளிப்பதிவு – சானு ஜான் வர்கீஸ், வெளியீடு – சினிமாக்காரன், மக்கள் தொடர்பு- யுவராஜ்

விசாகப்பட்டினத்தில் எஸ்.பி. அர்ஜுன் சர்க்கார் (நானி), குற்றவாளிகளுக்கு சிம்மசொப்னமாக இருப்பதும், அவர்களுக்கு எதிரான கடுமையான மற்றும் வன்முறை நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர். இந்நிலையில் உயிர் தியாகம் செய்து உயரிய விருது பெரும் ஒரு பெண் ஐபிஎஸ்ஸை கொண்டாடும் வேளையில், எஸ்.பி. அர்ஜுன் சர்க்கார் மறைக்கப்பட்ட முக்கிய காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு சிறையில் எதிர்ப்பு கிளம்ப, தன்னுடன் அடைக்கப்பட்ட சக கைதிக்கு தன்னை கைது செய்த காரணத்தை விவரிப்பது போல் கதைக்களம் தொடங்குகிறது.ஜம்மு காஷ்மீரில் ஒரு காவல் கண்காணிப்பாளராக அர்ஜுன் சர்க்கார் வேலை செய்யும் போது கொடூரமான கொலைகள் அரங்கேறுகிறது. கொலை செய்யப்பட்டவரை தலைகீழாக தொங்க விட்டு கழுத்தை அறுத்து, சில உடல் பாகங்களை எடுத்து தடயங்கள் இல்லாதவாறு நடந்திருப்பதை போலீஸ் கண்டுபிடிக்கிறது. இதே போல் நாடு முழுவதும் 13 கொலைகள் ஒரே மாதிரியாக இதே பாணியில் நடக்கிறது. இதற்கான காரணம், கொலைகாரன் யார் என்பதில் பெரிய மர்மம் நீடிக்கிறது. அர்ஜுன் தனது விசாரணையை  தொடங்க இறுதியில் அவரை ஒரு ரகசிய கும்பலுக்கும் அதன் அதிநவீன, சிலிர்க்க வைக்கும் கடைபிடிக்கும் நடைமுறைகளுக்கு இட்டுச் செல்கிறது. எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தனியாக செல்லும் அர்ஜுன் சர்க்கார் அந்த பெரிய நெட்வொர்க் கும்பலை எப்படி சமாளித்தார்? அந்த சைக்கோ கொலையாளிகளிடமிருந்து அப்பாவி மக்களை எப்படி காப்பாற்றினார்?  இந்தக் கொலைகளுக்கு பின்னால் செயல்படும் கொடூரமான நபர் யார், அவர்களின் நோக்கம் என்ன? அர்ஜுன் சர்க்கார் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாரா? அர்ஜுன் சிறைக்குச் செல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் ரத்தம் தெறிக்கும் பரபரப்பான க்ளைமேக்ஸ்.

நானி மென்மையான ரோலிலும், நேச்சுரலாக தன்னுடைய நடிப்பில் கொடுத்தவருக்கு இந்தப் படம் பெரிய மாஸ் ஹீரோ லெவலுக்கு முன்னேறி எடுத்து சென்று விட்டது. ஒரு நேர்மையான மூர்க்கமான குணம் கொண்டவராக, குற்றவாளிகளுக்கு தயவு தாட்சன்யம் பார்க்காமல் தண்டனை கொடுப்பதில் வல்லவராக, ஒவ்வொரு குற்ற சம்பவத்தின் அடிப்படை காரணங்கள், அணுகும் முறை, அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது, அவர்களை அணுகுவதற்காக அவர்கள் பாணியை பின் பற்றுவது, ஒன் மேன் ஆர்மியாக யாரையும் நம்பாமல் தன் பலத்தை மட்டுமே நம்பி துணிவாக களமிறங்கும் திறன் என்று படம் முழுவதும் ரண களமாக காட்சியளித்தாலும், நம் கண்ணில் பிரகாசமாக, ஸ்டைலீஷ் அதிகாரியாக தெரிவது நானி மட்டுமே.பாராட்டுக்கள்.

ஸ்ரீநிதி ஷெட்டி அறிமுகமாகி காதலியாக தன்னுடைய கதாபாத்திரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்குள் ஸ்பையாக இருக்குமோ என்ற கேள்வி முதல் பாதி எழுந்தாலும், பின்னர் இரண்டாம் பாதியில் அவரின் நோக்கம், எதற்காக வந்தார் என்பதை விவரித்து நானிக்கு புரிய வைத்து நானியுடன் கை கோர்த்து அதிரடி ஆக்ஷனிலும் தடம் பதித்துள்ளார்.

வில்லனாக பிரதீக் பப்பர் சைக்கோவாக மிரட்டியிருக்கிறார்.இவருடன் கோமளி பிரசாத், சூர்யா ஸ்ரீனிவாஸ், ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி, ஆதி பாலா, மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், அமித் சர்மா மற்றும் அதிவி சேஷ் ஆகியோர் ஆக்ஷன் க்ரைம் குற்ற பின்னணி கதையில் தங்களுடைய பங்களிப்பை கவனமாக பதிவு செய்து முக்கிய பங்காற்றியுள்ளனர்.

படத்தின் இறுதிக் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் ஏ.சி.பி. வீரப்பன் கதாபாத்திரத்தில் கார்த்தி  அடுத்த படமான ஹிட்: தி ஃபோர்த் கேஸ் கம்பீரமாக என்ட்ரி கொடுப்பது போல் படம் முடிவடைகிறது.

இசை  மிக்கி ஜே. மேயர், ஒளிப்பதிவு  சானு ஜான் வர்கீஸ் இவர்களின் பங்கு படத்தின் அனைத்து காட்சிகளுக்கும் பிரம்மிப்பும், இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு காட்டி புதுவித அனுபவத்தை கொடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், விசாகப்பட்டினம் என்று கதை பின்னப்பட்ட விதத்தை தங்களுடைய திறமையான தொழில் நுட்பத்தால் சிறப்பித்திருக்கின்றனர்.

படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீPனிவாஸ் இரண்டாம் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகள் நீண்டு கொண்டே போவதை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

பாலிவுட், ஹாலிவுட் கலந்த பல ஆக்ஷன் காட்சிகள் படத்தில் மிரட்டலான நம்ப முடியாத முக்கிய அம்சங்களுடன் மெய் சிலிர்க்க வைத்து பிரமிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

ஹிட் 3 படத்தின் கதாபாத்திரங்களுக்கு பெருமை சேர்த்திருந்தாலும் வன்முறையும் இரத்தக்களரியும் அதிகமாக காண்பிக்கப்பட்டுள்ளது.இயக்குனர் சைலேஷ் கோலனு முதல் இரண்டு படங்களின் மிகவும் யதார்த்தமான கதைக்களத்தில் கொடுத்து இந்த மூன்றாம் பாகத்தை நானியின் மாஸ் தன்மைக்கேற்றவாறு வடிவமைத்து அதன் உயர்ந்த செயல் மற்றும் திரைக்கதை தருணங்களுடன் முற்றிலும் மாறுபட்ட அதிர்வுடன் ரத்தம் தெறிக்க கொடுத்துள்ளார். இறுதிக் காட்சியில் நானியை காப்பாற்ற போலீஸ் வர தாமதமானாலும் இரண்டு பாகங்களின் ஹீரோ என்ட்ரி கொடுத்து காப்பாற்றி விடுகிறார்கள். ஹிட் என்ற முத்திரையை பதித்து ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை இனி பல பாகங்கள் உருவாக காரணமான அனைத்தையும் செய்து அசத்தியுள்ளார் இயக்குனர் சைலேஷ் கோலனு.

மொத்தத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யூனானிமஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரசாந்தி திப்பிரிநேனி மற்றும் நானி இணைந்து தயாரித்திருக்கும் ஹிட்: தி தேர்ட் கேஸ் வன்முறை தெறிக்கும், அதிரடி ஆக்ஷன், மாஸ் கலந்த த்ரில்லிங் வெற்றியின் மூலம் பான் இந்தியா அடையாள சின்னமாக மாறும்.