ஸ்வீட் ஹார்ட் சினிமா விமர்சனம் : ஸ்வீட் ஹார்ட் அழகான எமோஷனல் லவ்டச் | ரேட்டிங்: 3.5/5
ஓய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கும் ஸ்வீட் ஹார்ட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்வினீத் எஸ்.சுகுமார்.
இதில் ரியோ ராஜ் – வாசு, கோபிகா ரமேஷ் – மனு, அருணாச்சலேஸ்வரன் – செந்தில் , பௌசி – காயத்திரி, மனு அப்பா – ரஞ்சி பணிக்கர், மற்றும் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பகலைஞர்கள்:- இசை : யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு : பாலாஜி சுப்ரமணியம், படத்தொகுப்பு : தமிழரசன், கலை இயக்குனர் : சிவ சங்கர், மக்கள் தொடர்பு – யுவராஜ்
வாசு (ரியோ ராஜ்) சிறு வயதில் பெற்றோர் அடிக்கடி சண்டை போட, இறுதியில் பாசத்துடன் இருந்த டாக்டரான தாய் இவர்களை விட்டு பிரிந்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறார். அதன் பின் அக்காவிடம் வளரும் வாசு திருமண பந்தம், பாசம், குழந்தைகள் என்பதில் துளியும் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.இந்நிலையில் வாசு மனுவை (கோபிகா ரமேஷ்) காதலிக்க தொடங்குகிறார். மனுவின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, வேறு வழியின்றி வாசுவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். ஆனால் இதற்கு உடன்படாத வாசுவிடம் சண்டையிட்டு பிரிந்து செல்கிறார். அதன் பின் பிறந்த நாளில் மனுவின் வீட்டில் அவரது படுக்கையறையில் வாசு இருப்பதை அவளது குடும்பத்தார் பார்த்து அதிர்;ச்சியடைகின்றனர். அன்றிலிருந்து வீட்டில் கட்டுப்பாடும், தடையும் அதிகரிக்க, செல்போன் உபயோகிக்கவும் முடியாமல் மனு தவிக்கிறார். மனு ஒரு நாள் தான் கர்ப்பமாக இருப்பதாக உணர்ந்து வாசுவிற்கு எப்படியோ போன் மூலம் தகவல் சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் வாசு மனுவிடம் கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு சொல்கிறார். அதன் பின் மனு வீட்டை விட்டு வெளியே வர முடிந்ததா? மனு என்ன முடிவு எடுத்தார்? வாசுவும், மனுவும் இறுதியில் திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? என்பதே படத்தின் முடிவு.
வாசுவாக ரியோ ராஜ் இளமை துள்ளும் இளைஞராக வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் விரக்தியோடு வாழ்வதும், காதலிக்க தொடங்கியவுடன் பொறுப்புக்களை ஏற்க மறுத்து நிராகரிக்க காரணங்கள் சொல்லிக் கொண்டு விட்டு பிரிந்து சென்றாலும், அதன் பின் இரண்டு வித மனப்போரட்டத்தில் இறுதியில் எடுக்கும் முடிவில் நிம்மதி பெருமூச்சு விட செய்கிறார். மிகவும் அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் கவர்கிறார்.
கோபிகா ரமேஷ் காதலிக்கு உண்டான அத்தனை அம்சங்களையும் நடிப்பில் கொடுத்து, உணர்ச்சிகளின் போராட்டங்களில் சிறப்பாக செய்துள்ளார்.
அருணாச்சலேஸ்வரன், பௌசி, ரெஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் கச்சிதம்.
யுவன் ஷங்கர் ராஜா இசை மற்றும் பின்னணி இசை, பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு, தமிழரசன் படத்தொகுப்பு, சிவா சங்கரின் கலை இயக்கம் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;கள் இளமை தூக்கலுடன் இன்றைய காலகட்டத்திற்கேற்றவாறு நச்சென்று கொடுத்துள்ளனர்.
காதலர்களின் நவீன உலகத்தில் உடைந்த மனங்கள், பிரிக்கும் குடும்பத்தினர், திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் என்று கதைக்களம் நான்-லீனியர் பாணியில் செல்வதும் அதில் சிக்கல்கள், பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து கருவை கலைக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கான பதிலாக சென்டிமென்ட் கலந்த கர்ப்பிணியின் கதையோடு தாயின் பரிதவிப்பை ட்விஸ்ட் கொடுத்து படத்தை முடித்து இயக்கியுள்ளார் ஸ்வினீத் எஸ்.சுகமார். மனதளவில் பாதித்திருக்கும் பிடிவாதம் குணம் படைத்த காதலனை விடாப்பிடியாக மனதை மாற்றும் காதலியின் வலியை நகைச்சுவை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகமார்.
மொத்தத்தில் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கும் ஸ்வீட் ஹார்ட் அழகான எமோஷனல் லவ்டச்.