வருணன் சினிமா விமர்சனம் : வருணன் கண்ணீராகும் தண்ணீர் போர் | ரேட்டிங்: 2.5/5
யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீPதரன் தயாரித்திருக்கும் வருணன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயவேல்முருகன்.
இதில் அய்யாவுவாக ராதாரவி, ஜானாக சரண்ராஜ், தில்லையாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ், சிட்டுவாக கேப்ரியேலா, அக்னியாக ஹரிப்ரியா, டப்பாவாக ஷங்கர்நாக் விஜயன், மருதுவாக பிரியதர்சன், மதுரைவீரனாக ஜீவா ரவி, ராணியாக மகேஸ்வரி, யாளியாக அர்ஜுனன் கீர்த்திவாசன், ஹைடுவாக ஹைட் கார்டி, நண்பராக கௌசிக், ரம்யாவாக கிரண்மாய்,கமுதியாக தும்கன் மாரி, துளசியாக குழந்தை ஜாய்ஸ் , சீமாவாக ஐஸ்வர்யா நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள் : இணை தயாரிப்பு: வான் புரொடக்ஷன்ஸ், இணை தயாரிப்பாளர்: ஜெயவேல்முருகன், இசையமைப்பாளர்: போபோ சஷி. ஒளிப்பதிவாளர்: எஸ்.ஸ்ரீPராம் சந்தோஷ், எடிட்டிங்: யு.முத்தையன் டிஎஃப்டி, அதிரடி இயக்குனர்: தினேஷ் சுப்பராயன், கலை இயக்குனர்: பது, நடனம்: தினேஷ், பாப்பி, விளம்பர பாடல் நடனம் : ஸ்ரீதர், ஒலி வடிவமைப்பு: தபஸ் நாயக், மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
வடசென்னையின் இரு துருவங்களாக கேன் வாட்டர் சப்ளை செய்யும் வியாபாரிகள் அய்யாவு (ராதா ரவி) மற்றும் ஜான் (சரண்ராஜ்). இருவரும் கேன் வியாபாரத்தொழிலில் போட்டி இருந்தாலும் அவரவர்களுக்கான பகுதிகளை பிரித்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சுமுகமாக தண்ணீர் கேன் சப்ளை செய்து வருகிறார்கள்.அய்யாவு சொந்தமாக தண்ணீர் தொழிற்சாலை வைத்திருப்பதால் நல்ல வருமானம் பார்க்கிறார். ஆனால் ஜான் தண்ணீர் வாங்கி தான் கேன் வாட்டர் சப்ளை செய்வதால் வருமானம் டல்லடித்து பண பற்றாக்குறையோடு இருக்கிறார். இதனால் ஜான் மனைவி ராணி (மகேஸ்வரி) மற்றும் அவரது மைத்துனர் டப்பா (சங்கர்நாக் விஜயன்) ஆகியோர் பணத்தாசையால் போலீசிற்கு தெரியாமல் சுண்ட கஞ்சி சாராயம் காய்ச்சி பதுக்கி விற்கிறார்கள். இந்நிலையில் தில்லை (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்) மற்றும் மருது (பிரியதர்ஷன்) இருவரும் அய்யாவுவிடம் வேலை பார்ப்பவர்கள். இவர்களிடம் எப்போதும் ஜானின் மச்சான் மற்றும் அவரது ஆட்கள் வம்புக்கு இழுத்து சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றனர். அதே நேரத்தில் ஜான் மச்சான் டப்பாவின் கோஷ்டியை போலீஸ்காரர் மதுரைவீரன் (ஜீவா ரவி) ஆதாரத்துடன் பிடிக்க எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார். நாளடைவில் சில சம்பவங்களால் இரு கோஷ்டி மோதல்களால் கொலை வரை சென்று விடுகிறது. அதன் பின் என்ன ஆனாது என்பதே படத்தின் இறுதி முடிவு.
ராதாரவி அதிகாரத்தோடும், அதட்டலோடும் பிரச்சனைகளை சுமூகமாக அமைதியோடு கையாளும் குணம் படைத்த முதலாளி அய்யாவுவாக வாழ்ந்துள்ளார்.
ஜான்னாக சரண்ராஜ், தில்லையாக துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், சிட்டுவாக கேப்ரியேலா, அக்னியாக ஹரிப்ரியா, டப்பாவாக ஷங்கர்நாக் விஜயன், மருதுவாக பிரியதர்சன், மதுரைவீரனாக ஜீவா ரவி, ராணியாக மகேஸ்வரி, யாளியாக அர்ஜுனன் கீர்த்திவாசன், ஹைட்டுவாக ஹைட் கார்டி, ரம்யாவாக கிரண்மாய், கமுதியாக தும்கன் மாரி, துளசி அனைவரும் வடசென்னைவாசிகளாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஸ்ரீராம் சந்தோஷ், ராயபுரம் பகுதியின் வாழ்வியலையும், சாராயம், கேன் வாட்டர் சப்ளை செய்யும் சம்பவங்களையும் மிகுந்த யதார்த்தமாக காட்சிக்கோணங்களில் கொடுத்து கை தட்டல் பெறுகிறார்.
போபோ சசியின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தொகுப்பாளர் முத்தையன் எடிட்டிங்; திரைக்கதைக்கு உறுதுணையான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்குனர் ஜெயவெல்முருகனின் வருணன் வடக்கு சென்னையில் தண்ணீர் சப்ளை செய்யும் இரு கோஷ்டிகளுக்கும் இடையிலான தீவிரமான போட்டிகள், துரோகங்கள், தந்திரங்கள் அதனால் ஏற்படும் கொலைகள் என்ற திரைக்கதை விவரிப்புடன் பதற்றத்துடன் எதிர்கொள்வதைச் சுற்றியே அமைத்து சுவாரஸ்யத்துடன் இயக்க முயற்சித்துள்ளார். படத்தில் சமூகத்தின் சித்தரிப்பு மற்றும் போராட்டங்கள் உண்மையானவை, இது வட சென்னையின் துடிப்பான கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. வழக்கமான நிகழ்வுகள் இந்த படத்தில் இருந்தாலும் ஒற்றுமை, விடாமுயற்சி மற்றும் சமூக ஆதரவின் முக்கியத்துவத்தை நுட்பமாகத் தொடுகிறது. வருணனின் வலிமை நிஜ வாழ்க்கை சவால்களை பிரதிபலிக்கும் திறன் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் பின்னடைவில் உள்ளது.
மொத்தத்தில் யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரித்திருக்கும் வருணன் கண்ணீராகும் தண்ணீர் போர்.