ல் தக சையா விமர்சனம் : ல் தகா சைஆ விறுவிறுப்பு குறைச்சல் | ரேட்டிங்: 2/5

0
220

ல் தக சையா விமர்சனம் : ல் தகா சைஆ விறுவிறுப்பு குறைச்சல் | ரேட்டிங்: 2/5

கப்பில் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் காதல் தம்பதிகள் சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் ல் த கா சை ஆ.

படத்திற்கு ஒளிப்பதிவு எம் எஸ் மனோகுமார்.இசை ஈ ஜே. ஜான்சன்,படத்தொகுப்பு பரணி செல்வம். பாடலாசிரியராக க .சுதந்திரன், பேக்ரவுண்ட் மியூசிக் சுரேஷ் ஷர்மா, பிஆர்ஒ-சக்தி சரவணன்.

இல்லறத்தில் மகிழ்ச்சியான தம்பதிகளாக ராம் ரம்யா வாழ்கின்றனர்.ஒரு நாள் இரவில் ராம் ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவு நிஜத்தில் நடக்கிறது. மனைவி தாய்மை அடைவதாக கனவில் வர காலையில் மனைவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்க மகிழ்ச்சி கொள்வதா? அல்லது பயப்படுவதா? என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் ராம். பின்னர்  அதே போல் தூங்கும் போது கனவில் பல சம்பவங்கள் நடக்க அது உண்மையில் நடப்பதை காண்கிறார். இதனிடையே பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அறையில் சந்திப்பது போன்றும் அந்தப்பெண் மர்மமாக இறந்து போவதும்,போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது போன்றும் துப்பாக்கியால் சுடுவது போன்றும் கனவு காண்கிறார்.இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு மனைவியிடமும் சரிவர பேசாமல் பித்து பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார். இறுதியில் ராம் கண்ட கனவு நிஜத்தில் பலித்ததா? உண்மையில் நடந்தது என்ன? அனைத்தும்  கனவா இல்லை நிஜமா?  என்பது படத்தின் க்ளைமேக்ஸ்.

கணவன் மனைவியாக நடித்திருக்கும் சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா இருவரும் நிஜத்தில் தம்பதிகள் என்பதால் தாராளமாக பாடல் காட்சிகளில் கவர்ச்சி விருந்து படைத்து நடித்துள்ளனர்.  மற்றும் படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்களும் முடிந்தவரை ஈடு கொடுத்து நடித்துள்ளனர். மாமாவாக வருபவரும் ஆண்டவரே என்று அவருடைய பக்தனாக வருபவரும்  ஒரு சில காட்சிகள் என்றாலும் சிரிக்க வைக்கும் ரகம்.

ஒளிப்பதிவு எம் எஸ் மனோகுமார், இசை ஈ ஜே. ஜான்சன், படத்தொகுப்பு பரணி செல்வம், பாடலாசிரியராக க .சுதந்திரன், பின்னணி இசை சுரேஷ் ஷர்மா ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே புது முகங்கள் என்பதால் படத்தின் காட்சிககள் நிஜத்தில் நடக்கிறதா கனவில் நடக்கிறதா என்பதை குழப்ப மனநிலையில் கொடுத்திருப்பது நன்றாக தெரிகிறது.

தமிழ் சினிமாவில் காதல் தம்பதியர் தயாரித்து நடித்திருக்கும் முதல் படத்தில் ஒருவனுக்கு பிரச்சனை கனவில் வர, அதை நிஜத்தில் எப்படி சரி செய்ய போராடுகிறான் என்பதையும், இறுதியில் வரும் திருப்பம் படத்தின் எதிர்பார்;ப்பை குறைத்து விட்டாலும், இதற்காகவா இத்தனை மெனக்கெடல் என்று எண்ண வைத்து பணக்காரராக இருப்பதை விட ஏழையாக இருப்பது மேல் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சதா நாடார்.

மொத்தத்தில் கப்பில் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் காதல் தம்பதிகள் சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா தயாரித்திருக்கும் ல் தகா சைஆ விறுவிறுப்பு குறைச்சல்.