லைன்மேன் சினிமா விமர்சனம் : லைன்மேன் அங்கீகாரத்திற்காக எளிய இளம் விஞ்ஞானியின் வாழ்நாள் போராட்டம் | ரேட்டிங்: 2.5/5

0
291

லைன்மேன் சினிமா விமர்சனம் : லைன்மேன் அங்கீகாரத்திற்காக எளிய இளம் விஞ்ஞானியின் வாழ்நாள் போராட்டம் | ரேட்டிங்: 2.5/5

வினோத் சேகர் மற்றும் தினகரன் பாபு ஆகியோர் தயாரித்து  உதய் குமார் மற்றும் தயாரிப்பாளர் வினோத் சேகர் சேர்ந்து இயக்கிருக்கும் இப்படத்தை ஒடிடி பிளாட்ஃபார்ம் ஆஹாவில் பார்க்கலாம்.

இதில் சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், தமிழ், அதிதி பாலன் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு விஷ்ணு​ கே ராஜா, இசை தீபக் நந்தகுமார், எடிட்டிங் சிவராஜ், மக்கள் தொடர்பு நிகில்முருகன்.

ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டு, அறிமுக இயக்குனர் எம் உதயகுமார் இயக்கிய லைன்மேன், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் செந்திலின் (ஜெகன் பாலாஜி) கதையை விவரிக்கிறது. மொத்தக் கிராமமும் வருடத்தில் எட்டு மாதங்கள் உப்பளத்தில் வேலை செய்து பிழைப்பு நடத்தி மீதி நான்கு மாதங்கள் உப்பளத்தின் உரிமையாளர் தாளமுதனிடம் கடன் வாங்கி பிழைப்பு நடத்துகிறார்கள். செந்திலின் தந்தை, சுப்பையா (சார்லஸ்), அரசு மின்சாரத் துறையில் எலக்ட்ரிக் லைன்மேனாக இருந்து, செந்திலை எலக்ட்ரானிக் இன்ஜினியராக ஆக்குகிறார். இந்த கிராமத்துக்கும் சரியான சாலைகள் இல்லை, போக்குவரத்து வசதி இல்லை. சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு உப்பு சப்ளை செய்யும் தாளமுதன், தனது உப்பளங்களுக்கு மின்சாரம் திருடுவதனால் லைன்மேன்கள் தொடர்ந்து மின் கம்பிகளில் வேலை செய்வதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. செந்திலின் தாயாரும், இந்த விதிமீறல்களால் மின்சாரம் தாக்கி இறந்தவர். மேலும் சுப்பையாவின் தொடர்ச்சியான முயற்சியில் சட்டவிரோதமான மின்சாரத் திருட்டைச் சமாளிக்கிறார். இதற்கிடையில், செந்தில் ஆட்டோ-சன் சுவிட்ச் என்ற சாதனத்தை உருவாக்குகிறார், அங்கு சூரியன் மறையும் போது தெரு விளக்குகள் எரியும் மற்றும் சூரியன் உதயமாகும் போது அணைக்கப்படும், இதனால் லைன்மேன்களுக்கு ஆபத்து குறைகிறது. செந்தில் தனது திட்டத்திற்கு கலெக்டரிடம் ஒப்புதல் பெறவும், தனது திட்டத்தை மதிப்பீடு செய்து அதை செயல்படுத்தவும் லைன்மேன்களின் உயிரைக் காக்க தமிழக முதல்வரிடம் தொடர்ந்து மனு கொடுக்கவும் எப்படி போராடுகிறார் என்பதுதான் முழு படமும். ஆனால் இதைத் தடுக்க தாளமுதனும் அவரது கூட்டாளிகளும் மிரட்டல் முதல் கொலைகள் வரை முயற்சி செய்கிறார்கள். இறுதியாக என்ன நடந்தது? என்பதே படத்தின் கதை.

தந்தையாக அனுபவ நடிப்பில் சார்லி மிளிர்கிறார். இளம் விஞ்ஞானியாக தன் தாய்க்கு நேர்ந்த அவலம் மற்றவர்களுக்கும் நடக்கக்கூடாது என்று கண்டுபிடிப்பை அங்கீகாரம் பெற போராடும் இளைஞன் செந்திலாக ஜெகன் பாலாஜி, காதலியாக சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், தமிழ், கலெக்டராக சில காட்சிகளில் அதிதி பாலன் படத்திற்கு தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவு விஷ்ணு கே ராஜா, இசை தீபக் நந்தகுமார், எடிட்டிங் சிவராஜ் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;கள் உப்பள தொழிலில் ஈடுபடும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை திறம்பட கொடுத்துள்ளனர்.

தூத்துக்குடி உப்பள தொழில் வேலை செய்யும் மக்களின் வாழ்வியலையும், தன் சமூகத்தை ஒரு உன்னத கண்டுபிடிப்பும் மூலம் காப்பாற்ற அங்கீகாரத்திற்காக கலெக்டர், முதல்வர் என்று முயற்சி செய்யும் ஒரு இளம் விஞ்ஞானியின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கியிருக்கின்றனர் உதய் குமார் மற்றும் தயாரிப்பாளர் வினோத் சேகர். இவர்கள் முயற்சிக்கும் கடின உழைப்பிற்கும் பாராட்டுக்கள். திரைக்கதையை இன்னும் அழுத்தமாகவும் யதார்த்தமாகவும் கையாண்டு சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில் வினோத் சேகர் மற்றும் தினகரன் பாபு ஆகியோர் தயாரித்திருக்கும் லைன்மேன் அங்கீகாரத்திற்காக எளிய இளம் விஞ்ஞானியின் வாழ்நாள் போராட்டம்.