மார்கழி திங்கள் விமர்சனம் : மார்கழி திங்கள் சாதியும், காதலும் கலந்த பழி வாங்கும் சதித்திட்டத்தின் சதுரங்க ஆட்டம் | ரேட்டிங்: 2.5/5
வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் சுசீந்திரன் தயாரித்து கதை, திரைக்கதை எழுத மார்கழி திங்கள் படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ்.கே.பாரதிராஜா.
இதில் இயக்குனர் பாரதிராஜா, ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண், சுசீந்திரன், அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-இசைஞானி பாரதிராஜா, ஒளிப்பதிவு-வாஞ்சிநாதன் முருகேசன், எடிட்டர்-தியாகு, கலை-சேகர்,வசனம்-செல்ல செல்லம், சண்டை- தினேஷ் காசி, நடனம்-ஷோபி பால்ராஜ், உடை-வாசுகி பாஸ்கர், இணை இயக்குனர் – ராஜ பாண்டியன், தயாரிப்பு மேற்பார்வை -சுவாமிநாதன், கிரியேடிவ் புரொடியூசர்- துரை, பிஆர்ஒ-நிகில்.
பழனியில் பெற்றோரை இழந்து தன் தாத்தா ராமைய்யாவின்(பாரதிராஜா) அன்பான பராமரிப்பு அரவணைப்பில் செல்லமாக வளர்கிறார் கவிதா(ரக்ஷனா). பள்ளியில் படிப்பில் முதல் மாணவியாக திகழ்கிறார்.இவரின் உயிர் தோழி ஹேமா (நக்ஷா சரண்). கவிதாவின் தாய் மாமன் ஜாதி வெறி பிடித்த தர்மன் (சுசீந்திரன்).இவரது பள்ளியில்; பத்தாம் வகுப்பில் வந்து சேரும் வினோத் (ஷ்யாம் செல்வன்) கவிதாவை விட நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெறுகிறார். இதனால் கவிதா கோபமடைந்து நன்றாக படித்தாலும் வினோத்தை படிப்பில் ஜெயிக்க முடியாமல் திணறுகிறார். கவிதாவின் உள்நோக்கத்தை புரிந்த கொண்ட வினோத், படிப்பில் விட்டு கொடுத்து கவிதாவை முதல் மாணவியாக ஜெயிக்க வைக்கிறார். இதனை கேள்விப்படும் கவிதா வினோத்தை காதலிக்க தொடங்குகிறாள். இருவரும் பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கும் போது தன் தாத்தாவிடம் காதலைப் பற்றி சொல்லி விடுகிறார் கவிதா. ராமைய்யா காதலுக்கு சம்மதம் கொடுத்து விட்டு ஒரு கண்டிஷனும் போடுகிறார். அதாவது இருவரும் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை சந்தித்து பார்த்து பேசக் கூடாது, அதன் பின் திருமணத்தை முடிக்கலாம் என்று தாத்தா சொல்ல, இருவரும் சம்மதம் தெரிவிக்கின்றனர். வினோத் சென்னையில் உள்ள கல்லூரியில் படிப்பை தேர்வு செய்ய கவிதா அவரது சொந்த ஊருக்கு அருகிலுள்ள கல்லூரியில் படிப்பைத் தேர்வு செய்து படிக்கிறார். கல்லூரி படிப்பை முடித்து தன் காதலனை பார்க்க செல்கிறார் கவிதா. ஆனால் அங்கே வினோத் மற்றும் அவரது பெற்றோர் காணாததை கண்டு அதிர்ச்சியாகிறார்.அதன் பின் தன் தோழி, நண்பர்களிடம் விசாரிக்கிறார். இறுதியில் கவிதா வினோத்தை கண்டுபிடித்தாரா? வினோத் என்ன ஆனார்? கவிதா கேள்விப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் என்ன? அதன் பின் கவிதா என்ன முடிவு எடுத்தார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
இயக்குனர் பாரதிராஜா முதிர்ச்சியான நடிப்பில் தன் பேத்தியின் மீது பாசத்துடன் கண்டிப்பும் நிறைந்த தாத்தா ராமைய்யாவாக வாழ்ந்திருக்கிறார். இறுதியில் அவருக்கு பேத்தி கொடுக்கும் ஷாக் தான் படத்தின் ஹைலைட்.
மாணவன் வினோத்தாக புதுமுகம் ஷ்யாம் செல்வன் நல்ல தேர்வு, அளவான நடிப்பை வழங்கியுள்ளார்.
கவிதாவாக ரக்ஷனா படம் முழுவதும் அசத்தாலான நடிப்பு, அனைத்து உணர்ச்சிகளையும் அழகாக வெளிக்காட்டி தன்னை வஞ்சித்தவர்களை நயமாக பேசி வரவழைத்து பழி வாங்கும் காட்சிகளில் மிளர்கிறார். படத்தின் ஜீவனாக வந்து அழகுடன் நடிக்கவும் செய்திருப்பது சிறப்பு.
படத்தில் அங்கங்கே எட்டிப்பார்க்கும் ஒருவித வில்லத்தனத்தை வழங்கி இறுதியில் முக்கியத்துவத்தை இழந்திருக்கும் தோழி ஹேமாவாக நக்ஷா சரண், உருட்டல் மிரட்டலுடன் வில்லனாக சுசீந்திரன், ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் அப்புக்குட்டி மற்றும் பலர் கிராம மக்களாக பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இசைஞானி பாரதிராஜாவின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் மெருகை கொடுத்துள்ளது.
ஒளிப்பதிவு- வாஞ்சிநாதன் முருகேசன், எடிட்டர்-தியாகு, கலை-சேகர்,வசனம்-செல்ல செல்லம், சண்டை- தினேஷ் காசி ஆகிய தொழில் நுட்ப கலைஞர்;களின் ஒத்துழைப்பு கிராமத்து காதல் கதையுடன் கூடிய ஜாதி ரீதியான பழி வாங்கும் படத்திற்கு ஏற்ற நுணக்கங்களை சிறப்புடன் கொடுத்திருக்கிறார்கள்.
1997 முதல் 2004ல் காலகட்டத்தில் நடக்கும் கதையாக, அதில் காதல், நட்பு, துரோகம், சாதி வெறி, கொலை, பழிக்கு பழி என்ற கண்ணோட்டத்துடன் பழைய பாணி கதைக்களத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் கே. பாரதிராஜா. படம் முழுவதும் கிராமிய காதலாக வந்து இறுதிக்காட்சியில் தான் வேகமெடுக்கிறது. இந்தப் படத்தில் பாரதிராஜா-இளையராஜா இருவரையும் இணைத்ததோடு, பாரதிராஜாவின் மகன் மனோஜை இயக்குனராக அறிமுகம் செய்த பெருமை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுசீத்திரனையே சாரும்.
மொத்தத்தில் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் சுசீந்திரன் தயாரித்திருக்கும் மார்கழி திங்கள் சாதியும், காதலும் கலந்த பழி வாங்கும் சதித்திட்டத்தின் சதுரங்க ஆட்டம்.