மகாராஜா சினிமா விமர்சனம் : மகாராஜா மகளின் பாச அரியணையில் கம்பீரமாக நடைபோட்டு பழி தீர்க்கும் தனிக்காட்டுராஜா | ரேட்டிங்: 3.5/5

0
914

மகாராஜா சினிமா விமர்சனம் : மகாராஜா மகளின் பாச அரியணையில் கம்பீரமாக நடைபோட்டு பழி தீர்க்கும் தனிக்காட்டுராஜா | ரேட்டிங்: 3.5/5

சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி தயாரிப்பில் மகாராஜா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நித்திலன் சாமிநாதன்.

இதில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா,அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன், முனிஷ்காந்த், அருள்தாஸ், சச்சினா நிமிதாஸ்,பி.எல்.தேனப்பன், சரவண சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, சூப்பர்குட் சுப்ரமணி, பிரதீப் கே.விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இணைத் தயாரிப்பாளர் : கமல் நயன், ஒளிப்பதிவு இயக்குனர் : தினேஷ் புருஷோத்தமன், இசையமைப்பாளர் : பி அஜனீஷ் லோக்நாத், பாடல் வரிகள் : கவிப்பேரரசு வைரமுத்து, ஸ்டண்ட் இயக்குனர்: அன்ல் அரசு , எடிட்டர் : எஸ்.எஸ்.பிலோமின், வசனம்: நித்திலன் சாமிநாதன், ராம் முரளி, நிர்வாகத் தயாரிப்பாளர்: ஏ. குமார், ஒலி வடிவமைப்பு: அருண் எஸ் மணி, டப்பிங் பொறியாளர்: என்.வெங்கடபாரி, சவுண்ட் கலவை: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன் (ஆர்.கே ஸ்டுடியோஸ்) , ஆடை வடிவமைப்பாளர்: தினேஷ் மனோகரன், மேக் அப் ஆர்டிஸ்ட்: ஏ.ஆர்.அப்துல் ரசாக், ஆடை வடிவமைப்பாளர்: எஸ்.பழனி, பிஆர்ஒ- சுரேஷ் சந்திரா டிஒன்.

கே.கே.நகரில் ஜோதி சலூன் கடையை நடத்தும் மகாராஜா (விஜய் சேதுபதி) தன் மகள் ஜோதியுடன் (சச்சினா நிமிதாஸ்) பள்ளிக்கரணையில் வசிக்கிறார். மகள் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கும் மகாராஜா, விளையாட்டில் ஆர்வமுள்ள மகள் ஜோதி விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார். மறுநாள் வீட்டில் இருந்த லட்சுமி திருடு போய் விட்டது என்றும், மூன்று பேர் தன்னையும் அடித்து விட்டார்கள் என்றும் போலீசில் புகார் கொடுக்கச் செல்கிறார். இவரின் அடிபட்ட பரிதாப நிலையை பார்த்த இன்ஸ்பெக்டர் வரதராஜன் (நட்டி) இரக்கப்பட்டு லட்சுமி யார் என்று வினவுகிறார். அதற்கு லட்சுமி யார் என்பதை விவரிக்கும் மகாராஜாவை பார்த்து அனைவரும் கேலியும், கிண்டலும் செய்து இந்த புகாரை எடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள். மகாராஜா லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால் ஐந்து முதல் ஏழு லட்சம் வரை பணம் தருவதாக கூற, இன்ஸ்பெக்டர் வரதராஜனும் இதற்கு சம்மதித்து லட்சுமியை தேடச் சொல்கிறார். இரண்டு குழுக்களாக விசாரணையை தொடங்குகிறார்கள். இதனிடையே வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து எலக்ட்ரிகல் கடை நடத்தும் செல்வம் (அனுராக் காஷ்யப்) தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்து அந்தப் பெண்களை கற்பழித்து கொடூரமாக கொலை செய்யும் கொலைகாரன். அந்தப் பணத்தை வைத்து ஆடம்பரமாக தன் மனைவி, மகளுடன் வாழ்கிறான்.  அதன் பின் ஏற்பட்ட திடீர் திருப்பம் என்ன? செல்வத்தின் வாழ்க்கையில் குறிக்கிட்ட நபர் யார்? செல்வத்தின் குடும்பம் என்ன ஆனது? லட்சுமியை ஏன் மகாராஜா தேடுகிறார்? இரண்டு கதைகளும் சம்பந்தம் இல்லாமல் பயணிக்கும் போது, இறுதியில் எப்படி ஒன்றாக இணைகிறது என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

விஜய் சேதுபதி மகாராஜாவாக நல்ல கணவனாக, பாசக்கார தந்தையாக, மகள் தன்மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விரும்புபவராக, அமைதியனவராக வலம் வருவதும், போலீஸ் நிலையத்தில் தன்னை அவமானப்படுத்தி அழைத்தாலும் பொறுத்துக் கொண்டு அவர்கள் சொல்வதை செய்யும் வேலைக்காரனாகவும், தனக்கு நேர்ந்த கொடுமையை ஒவ்வொரு முறை விவரிக்கும் போதும் ஒரே மாதிரியாக தெரிய இறுதிக் காட்சியில் அதே சம்பவத்தை விவரிக்கும் போது வேறு மாதிரியாக நம் கண் முன்னே விரியும் போது அவரின் நியாயமான எதிர்பார்ப்பு, தவிப்பு, ஒவ்வொருவரையும் சமயம் பார்த்து உச்சபட்ச பழி வாங்குதல் நியாயமாக தெரியுமளவிற்கு உன்னதமான உணர்ச்சிகரமான நடிப்பை வழங்கியுள்ளார். இறுதியில் மகளை விட்டுக் கொடுக்காமல் அழைத்துச் செல்லும் காட்சியிலும், வில்லனை கதற வைத்து விட்டு செல்லும் காட்சியிலும் ஆக்ரோஷ சண்டைக் காட்சிகளிலும் தனித்துவமாக தெரிகிறார்.

அனுராக் காஷ்யப் இரட்டை வேஷம் போடும் கபடதாரியாக, தன் குடும்பத்திற்கு நல்லவராக காட்டிக்கொண்டு மற்ற குடும்பங்களை கதற விடும் கொடூர வில்லனாக இருப்பதும், அவரின் உண்மை சுயரூபம் தெரிந்தவுடன் குடும்பம் சிதற, அதற்காக எடுக்கும் பழி வாங்கும் படலத்தில் தன் வாழ்க்கை சின்னபின்னமாகி விடுவதையும் இறுதிக் காட்சியில் பரிதவிப்பதை சிறப்பாக செய்துள்ளார்.

சில காட்சிகள் என்றாலும் அன்பையும், வெறுப்பையும் ஒரு சேர கொட்டித் தீர்க்கும் கோகிலாவாக அபிராமி, மகள் ஜோதியின் பயிற்சியாளராக மம்தா மோகன்தாஸ், ஒரே காட்சியில் மறைந்து போகும் திவ்யபாரதி, ஆரம்ப சில காட்சியிலும், பின்னர் இறுதிக்காட்சியிலும் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி வில்லனிடம் நெத்தியடியாக வசனத்தை சொல்லி விட்டு நகரும் இடத்தில் ரசிகர்களின் கை தட்டல் பெறுகிறார் சச்சினா நிமிதாஸ்.

நட்டி நட்ராஜ் முதலில் கரப்டட் போலீசாக காட்டினாலும், காட்சிகள் நகர நகர இவரின் விசாரணை, தேடுதல் வேட்டை, சாட்சிகளை கொண்டு வர முயற்சிக்கும் போது ஏதோ பணத்திற்காக செய்கிறார் என்று தோன்றினாலும் இறுதிக் காட்சியில் வரும் திருப்பம் ஒரு நல்ல மனிதநேயம் மிக்க மனிதரை காணச் செய்து விடுகிறார்.

வளவளவென்று பேசும் சிங்கம் புலி இந்தப் படத்தில் மூக்கை ஒரு புறம் இழுத்துக் கொண்டு, நமட்டுச் சிரிப்பு சிரித்து, தலையை சொரிந்து கொண்டு சாதுர்யமாக காயை நகர்த்தும் குள்ளநரித்தனத்தில் வித்தியாசத்தைக் காட்டி வெறுப்பை சம்பாதித்து அதிர்ச்சி தருகிறார்.

மற்றும் பாரதிராஜா, பாய்ஸ் மணிகண்டன், முனிஷ்காந்த், அருள்தாஸ், பி.எல்.தேனப்பன், சரவண சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, சூப்பர்குட் சுப்ரமணி, பிரதீப் கே.விஜயன் அனைவரின் பங்களிப்பு படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஒவ்வொரு காட்சிக் கோணங்களையும் ஒவ்வொரு கோணத்தில் தினேஷ் புருஷோத்தமன் தொடர்ப்பு படுத்தி கொடுத்திருக்கும் விதம் படம் பார்ப்பவர்களுக்கு திருப்புமனையுடன் ஆச்சர்ய அனுபவத்தை கொடுத்துள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் பி அஜனீஷ் லோக்நாத் இசை கவனிக்க வைக்கிறது.

ஸ்டண்ட் இயக்குனர்: அன்ல் அரசு அதிரடி காட்டி மிரட்டலுடன் ஆக்ஷன் காட்சிகளை வழங்கியுள்ளார்.

எடிட்டர் : எஸ்.எஸ்.பிலோமின் இவரின் பங்கு அளப்பரியது. காட்சிகள் விரிவடையும் போது துண்டு துண்டாக கதை பயணிக்க ஒரு கட்டத்தில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு புள்ளியிலிருந்து மற்ற காட்சிகள் விரிவடைவதை காட்டும் இடங்களில், படம் முடியும் போது அனைத்தும் ஒரே நேர்கோட்டில் ஒருங்கிணைத்து சிறப்பாக செய்திருப்பதில் இயக்குனரின் எண்ணத்தை பிரதிபலித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

வசனம்: நித்திலன் சாமிநாதன், ராம் முரளி கச்சிதம்.

இரு குடும்பங்கள் வௌ;வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள், இருப்பதை வைத்து மகிழ்பவர் ஒரு புறம், இல்லையென்றாலும் பகட்டாக வாழ விரும்புபவர் ஒரு புறம், இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சந்திப்பு, எவ்வாறு பயணித்து குடும்பத்தை சிதைத்து பிரித்து பகையாக மாறுகிறது என்பதை தண்டுபாளைய கொலை கும்பல் ஸ்டைல் கலந்து தந்தை, மகள் பாசத்தை இருவேறு கோணங்களில் விவரித்து நான் லீனியர் பாணியில் சாதாரண கதையை சாமார்த்திய சாதுர்ய மிக்க கதையாக நகர்த்தி மாற்றியமைத்து திருப்பங்களுடன் இறுதி வரை வைத்திருப்பதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் இயக்கும் நித்திலன் சாமிநாதன். இறுதியில் சிறு சிறு காட்சிகள் கூட படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அர்த்தத்துடன் கொடுத்திருப்பது உதாரணமாக குழந்தையின் செயினும், கால் தடமும் தந்தையின் ரத்தத்தில் நனைவது டச்சிங் பாயிண்ட். வெல்டன்.

மொத்தத்தில் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி தயாரிப்பில் மகாராஜா மகளின் பாச அரியணையில் கம்பீரமாக நடைபோட்டு பழி தீர்க்கும் தனிக்காட்டுராஜா.