ப்ளடி பெக்கர் சினிமா விமர்சனம் :பிளடி பெக்கர் ரசிகர்களுக்கு ஏமாற்றமே | ரேட்டிங்: 2/5

0
477

ப்ளடி பெக்கர் சினிமா விமர்சனம் :பிளடி பெக்கர் ரசிகர்களுக்கு ஏமாற்றமே | ரேட்டிங்: 2/5

ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கி இருக்கும் படம் ‘ப்ளடி பெக்கர்’.

நடிகர்கள் :கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு ஸ்ரீ சரவணன்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : கலை இயக்குநர் – மணிமொழியன் ராமதுரை,ஒளிப்பதிவு – சுஜித் சரங், எடிட்டிங் – நிர்மல் கூட்டணி, இசை – ஜென் மார்ட்டினின் ,ஆடை வடிவமைப்பு – ஜெய் சக்தி ,நிர்வாக தயாரிப்பு – ராஜா ஸ்ரீதர், மக்கள் தொடர்பு – டி ஒன், சுரேஷ்சந்திரா, அப்துல் நாசர்

பிச்சை எடுப்பதில் விதவிதமாக கெட்டப் மாற்றும் பிச்சைக்காரன் கவின். இவருடன்  போக்குவரத்து சிக்னல்களில் பொருட்களை விற்று நேர்மையாக பணம் சம்பாதிக்கும் ஜாக் (ரோஹித் டென்னிஸ்) என்ற சிறுவன் வசிக்கிறான். இந்நிலையில் ஒரு நாள் பிச்சைக்காரனிடம் மறைந்த திரைப்பட நடிகர் சந்திரபோஸின் (ராதா ரவி) அரண்மனையில் அன்னதானம் வழங்கப்பட அங்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கவின். உணவு முடிந்த பிறகு அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம் கவினை கவர்ந்திழுக்க யாருக்கும் தெரியாமல் அந்த அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறார்.அங்கே மறைந்த நடிகரின் வாரிசுகள்  சொத்தை பிரிப்பதில்  தகராறில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் சொத்தில் பங்கை இரண்டாவது மனைவியின் மகனுக்கு எழுதியதால், அந்த மகன் கொலை செய்யப்படுகிறார். அதனால் அரண்மனையில் மாட்டிக் கொள்ளும் கவினை சொத்தை அபகரிக்க இறந்த மகனுக்கு பதில் நடிக்க சொல்கிறார் வக்கீல்.  இந்த சிக்கலில் மாட்டிக் கொள்ளும் கவின் என்ன ஆனார்?  அந்த ஆபத்திலிருந்து அவர் எப்படி தப்பித்தார்? அரண்மனையில் உள்ளவர்களுக்கும் கவினுக்கும்  உள்ள சம்பந்தம் என்ன? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

கவின் பிச்சைக்காரனாக தோன்றும் கதாபாத்திரத்தில் நடிப்பு செயற்கைத்தனத்துடன் இருப்பது தெரிகிறது.

ரெடின் கிங்ஸ்லி பேயாக வந்து உதவும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.

மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு ஸ்ரீ சரவணன் என அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பை வழங்குகிறார்கள்.

கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை, ஒளிப்பதிவாளர் சுஜித் சரங், எடிட்டர் நிர்மல் கூட்டணி, ஜென் மார்ட்டினின் இசை மற்றும் பின்னணி இசை, ஆடை வடிவமைப்பாளர் ஜெய் சக்தி ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் சேர்ந்து ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்களை கோர்வையாக கொடுத்து நன்றாக செய்துள்ளனர்.

இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் பல கேள்விகளை எழுப்பும் எண்ணற்ற கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் நிறைந்த ‘டார்க் காமெடி’  கலந்த திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார். நிகழும் பல விஷயங்களுக்கான பதில் அனைத்தும் இரண்டாம் பாதியில் வருகின்றன. உணர்ச்சிகரமான காட்சிகளும் பிச்சைக்காரனின் ஃப்ளாஷ்பேக் பகுதிகளும் இதற்கு இடையில் குறுக்கிட்டு படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏழைகளின் உயிரை பற்றி கவலை கொள்ளாத பணத்திமிர் பிடித்த மக்களின் செய்கையால் நடக்கும் விபரீதமும், அதற்கு பதிலடி கொடுக்கும் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரனின் மனதைரியத்தை பற்றி கதைக்களமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார்.

மொத்தத்தில் ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்திருக்கும் பிளடி பெக்கர் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.