பேபி அண்ட் பேபி சினிமா விமர்சனம் : பேபி அண்ட் பேபி ஆள்மாறாட்டக் குழந்தைகளால் ஏற்படும் சிக்கல்  சுவாரஸ்யம் குறைவு | ரேட்டிங்: 2.5/5

0
437

பேபி அண்ட் பேபி சினிமா விமர்சனம் : பேபி அண்ட் பேபி ஆள்மாறாட்டக் குழந்தைகளால் ஏற்படும் சிக்கல்  சுவாரஸ்யம் குறைவு | ரேட்டிங்: 2.5/5

யுவராஜ் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் பேபி அண்ட் பேபி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரதாப்

இதில் ஜெய் – சிவா, யோகி பாபு – குணா, சத்யராஜ் – மகாலிங்கம், பிரக்யா நாக்ரா – பிரியா, சாய் தன்யா – மலர், ரெடின் கிங்ஸ்லி – இன்ஸ்பெக்டர் குழந்தைவேலு, மொட்டை ராஜேந்திரன் – தூக்குத்துறை, ஆனந்தராஜ் – ராஜன், இளவரசு – முத்தையா, சிங்கம்புலி – புலி, ஸ்ரீமன் – மாணிக்கம், நிழல்கள் ரவி – தயாளன், கீர்த்தனா – தனம், பாப்ரி கோஷ் – மல்லிகா, விஜய் டிவி ராமர் – குமார், விஜய் டிவி தங்கதுரை – தங்கதுரை, சேசு – ஜம்புலிங்கம், கல்க​p ராஜா – கல்கி, பிரதோஷ் – அசோக் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : இசை: டி. இமான், ஒளிப்பதிவு: டி.பி. சாரதி எஸ்.ஐ.சி.ஏ, படத்தொகுப்பு: ஆனந்தலிங்ககுமார், பாடல் வரிகள்: யுகபாரதி, ஸ்டண்ட்: ஓம் பிரகாஷ், கலை இயக்குனர்: விஜய் ஐயப்பன், நிர்வாக தயாரிப்பாளர்: இளன்குமார், ராஜேஷ் நாராயணன், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: எஸ்.என்.அஸ்ரப், தயாரிப்பு நிர்வாகி: எம்.உதயகுமார், ஆடை வடிவமைப்பாளர்: கமலி செந்தில்குமார், ஒலி விளைவுகள்: சி.சேது, ஒலி கலவை: ஜெய்சன் ரூ டேனியல், ஒலி பொறியாளர்: சி ஷாஜூ, விஎஃப்எக்ஸ்: ஜனார்த்தனன் எம் (சிம்பயோசிஸ் டெக்னாலஜிஸ்), ஸ்டில்ஸ்: எம்.குமரேசன், ஒப்பனை: மாரியப்பன், ஆடை அணிந்தவர்: பி.ஆர்.கணேசன், கோர் டைரக்ஷன் டீம்: எஸ்.வெற்றிஅரசன் (இணை இயக்குனர்), சார்லஸ், சித்திக், தினகரன் சிவகுருநா தன்,பத்திரிக்கை தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா

சிவாவின்(ஜெய்) தந்தை மகாலிங்கம் (சத்யராஜ்) தனது பரம்பரை சொத்துக்காக ஆண் வாரிசை எதிர்பார்க்கிறார். மகாலிங்கத்திற்கு ஆண் மற்றும் பெண் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். திருமணம் செய்து கொண்டு வீட்டிலேயே வாழும் மகள் இரண்டும் பெண் பிள்ளைகளை பெற்றதால் தந்தையால் அவமானப்படுத்தப்படுகிறார்.தன் பரம்பரையில் ஆண் வாரிசு பெற்றவர்களுக்கே முழு சொத்தையும் கொடுத்து பேரனை தங்க தொட்டிலில் போட்டு விழா கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறார். இந்;த நிலையில் மகன் சிவாவுக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது என்று தெரிந்ததும் மகாலிங்கம் தனது மகன், பேரன் மற்றும் மருமகளை மீண்டும் வீட்டிற்கு அழைக்கிறார்.இதேப்போல் கடவுள் பக்தியும், ஜோதிட சம்பிராதாயங்களை கடைப்பிடிக்கும் முத்தையா (இளவரசு) தன் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் வரும் என்று நம்புகிறார். அவரின் மகன் குணா (யோகி பாபு) மருமகள் மலருக்கும் (சாய் தன்யா) பெண் குழந்தை பிறக்க சந்தோஷத்துடன் அவர்கள் இருவரையும் வீட்டிற்கு வரச்சொல்கிறார். சிவாவும் (ஜெய்) மனைவி பிரியா (பிரக்யா நக்ரா) ஆண் குழந்தையுடன் சென்னையிலிருந்து கோவைக்குச் செல்வதற்காகக் விமான நிலையத்தில் காத்திருக்க, அதே போல் மதுரைக்குச் செல்வதற்காகத் குணாவும் (யோகி பாபு) மனைவி மலர் (சாய் தன்யா) பெண் குழந்தையுடன் அதே விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் சிவா மற்றும் குணாவின் உறவினர்களால் தவறுதலாக குழந்தைகள் இருவர் கைகளுக்கும் மாறி விடுகிறது. இவர்கள் விமானத்தில் பயணிக்கும் போது சிவாவின் ஆண் குழந்தை குணாவிடமும், குணாவின் பெண்குழந்தை சிவாவிடமும் மாறியிருப்பது தெரிய வருகிறது. இருவரும் சந்திக்க முடியாமலும், குழந்தையை மாற்ற முடியாமலும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு சொந்த வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே அவர்களால் தங்கள் தந்தைகளிடமிருந்து பேரப்பிள்ளைகளை ஆண்,பெண் என்று மாற்றி ஏமாற்ற முடிந்ததா? பொறாமை பிடித்த உறவினர்களின் கடத்தல் திட்டத்தை முறியடித்தார்களா? இருவரும் தங்கள் குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.சிவாவாக ஜெய் மிகைப்படுத்தாத நடிப்பை வெளிப்படுத்தி குழந்தையை காணாமல் பரிதவிக்கும் சூழலில் நன்றாக செய்துள்ளார்.

மற்றொரு நாயகன் குணாவாக யோகி பாபு படம் முழுவதும் யதார்த்தமாக நடிப்பிலும், இடையிடையே ஒன்லைன் பஞ்ச்; நகைச்சுவை கலந்து தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

சத்யராஜ் மற்றும் இளவரசு படத்திற்கேற்ற பங்களிப்பை முக்கியத்துவம் இல்லையென்றாலும் கவலையின்றி செய்துள்ளனர்.

பிரக்யா நாக்ரா, சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஷ், விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் மற்றும் பலர் படத்தில் நிறைந்திருந்தாலும் அவர்களின் பங்களிப்பு குறைவு சிரிக்க வைக்க முடியாமல் திணறி இயன்றதைச் செய்திருக்கிறார்கள்.

யுகபாரதி பாடல் வரிகளுக்கு டி இமான் இசை அசத்தலாக உள்ளது.

டி.பி. சாரதி ஒளிப்பதிவு, ஆனந்தலிங்ககுமார் படத்தொகுப்பு மற்றும் விஜய் ஐயப்பன் கலை இயக்கம் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணி படத்திற்கு ஆறுதல்.

இரண்டு தம்பதிகள் தற்செயலாக தங்கள் குழந்தைகள் ஒரு விமான நிலையத்தில் மாறி விட  இவர்களின் ஒரு குடும்பம் ஒரு பேரனுக்கும் மற்றொன்று ஒரு பேத்திக்கும் ஆசைப்பட்டு ஆவலாக காத்திருக்கும் நேரத்தில் ஏற்படும் குழப்பத்தில் மாறிப்போன குழந்தைகளை தங்கள் குடும்பத்திற்கு தெரியாமல் சமாளித்து மீண்டும் தங்கள் குழந்தைகளை பரிமாறிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவதை கொஞ்சம் நகைச்சுவை கலந்து தோய்வுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் பிரதாப்

மொத்தத்தில் யுவராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள பேபி அண்ட் பேபி ஆள்மாறாட்டக் குழந்தைகளால் ஏற்படும் சிக்கல்  சுவாரஸ்யம் குறைவு.