புஜ்ஜி அட் அனுப்பட்டி சினிமா விமர்சனம் : ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ வளர்ப்பு பிராணிகளால் குழந்தைகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியை விதைக்கும் படம் | ரேட்டிங்: 2.5/5

0
252

புஜ்ஜி அட் அனுப்பட்டி சினிமா விமர்சனம் : ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ வளர்ப்பு பிராணிகளால் குழந்தைகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியை விதைக்கும் படம் | ரேட்டிங்: 2.5/5

ராம் கந்தசாமி கதை எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்து 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் குழந்தைகளை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.

இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழிலநுட்ப கலைஞர்கள் :இசை : கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு : அருண் மொழி சோழன், எடிட்டிங் : சரவணன் மாதேஸ்வரன், மக்கள் தொடர்பு சக்திசரவணன்.

சிவாவின் (கமல்குமார்) பண்ணை வீட்டில் வேலை செய்யும் பெற்றோருடன் சரவணன் (கார்த்திக் விஜய்) மற்றும் துர்கா (பிரணிதி சிவசங்கரன்) வசித்து வருகிறார்கள். பண்ணையின் உரிமையாளர் சிவா இரண்டு குழந்தைகளின் மேல் பாசத்துடன் இருக்கிறார். ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் வழியில் ஒரு ஆட்டுக்குட்டியை காப்பாற்றி வீட்டிற்கு எடுத்து வருகின்றனர். துர்கா ஆட்டுக்குட்டிக்கு புஜ்ஜி என்ற பெயர் வைத்து பாசமுடன் வளர்க்க, அசைவ பிரியரான அண்ணன் சரவணனும் அதன் மேல் அன்பை செலுத்தி பழக, இதனால் அசைவம் சாப்பிடவதை நிறுத்தி விடுகிறான்.குடிகார தந்தை பணத்தேவைக்கு புஜ்ஜியை விற்று விட, அதனால் குழந்தைகள் இருவரும் சோகத்தில் ஆழ்கிறார்கள். தங்கை துர்காவின் அழுகையும், பிடிவாதத்தையும் கண்டு அண்ணன் சரவணன் ஆட்டுக்குட்டி புஜ்ஜியை தேடி செல்ல திட்டமிடுகிறான். தாய் ஊருக்கு செல்ல, பள்ளிக்கு செல்வதற்கு பதில் ஆட்டுக்குட்டியை தேடி செல்கின்றனர் குழந்தைகள். வழியில் ஒரு குடும்பத்திற்கு பணிப்பெண்ணாக பணிபுரியும் அனாதை பெண் தர்ஷினிக்கு (லாவண்யா கண்மணி) உதவ அவர்களது தேடலில் தர்ஷினியும் சேர்க்கிறார். புஜ்ஜி ஆட்டு கசாப்பு கடையில் இருக்க, அதனை மீட்க ஐந்தாயிரம் பணம் தேவைப்படுகிறது. மேலும் பணத்தை திரட்டி புஜ்ஜியை மீட்க பெட்ரோல் பங்க்கில் அனைவரிடமும் பண உதவி கேட்க, மூவாயிரம் மட்டுமே திரட்ட முடிகிறது. மீதி இரண்டாயிரத்தை மறுநாள் கொடுப்பதாக கசாப்பு கடைக்காரரிடம் சொல்லி விட்டு செல்கின்றனர். இதற்கிடையில், நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வராததால் அவர்களை தேடி சிவா செல்கிறார்.  குழந்தைகள் ஒரு புறம் பணத்திற்காக அலைய, சிவா பெண்போலீஸ் உதவியுடன் குழந்தைகளை தேடுகிறார். இறுதியில் குழந்தைகள் சந்திக்கும் ஆபத்து என்ன? சிவா இவர்களை தேடி கண்டுபிடித்தாரா? புஜ்ஜியை உயிருடன் மீட்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அண்ணன் தங்கையாக கார்த்திக் விஜய் மற்றும் பிரணிதி சிவசங்கரன் யதார்த்தமான உடல் மொழி, வசன உச்சரிப்பு என்று தேர்ந்த நடிப்பை குழந்தைத்தனம் மாறாமல் வழங்கியுள்ளனர்.

கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் கிராமத்து மனிதர்களாக தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிக்கும் ரகம்.  கிராமத்து வாழ்வியலையும், தேடலையும் ரசிக்கும்படி தன் காட்சிக்கோணங்களால் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் மொழி சோழன் மற்றும் எடிட்டிங் சரவணன் மாதேஸ்வரன் சிறப்பாக செய்துள்ளார்.

பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுதல்களைப் பெற்ற புஜ்ஜி அட் அனுப்பட்டி, அண்ணன் தங்கை பாசத்தையும், காணாமல் போன ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டி தேடும் பயணத்தையும் ஒருங்கிணைத்து குழந்தைகளின் மனநிலையிலிருந்து படத்தின் கோணத்தை ராம் கந்தசாமி முதல் பாதியை இயக்கிய விதம் அருமை என்றாலும் அதற்காக தன்னந்தனியாக சென்று எடுக்கும் முயற்சிகள், ஆட்களிடம் சண்டை போடுவது, அவர்களை கடத்தி விற்க புறப்படும் கும்பலிடம் மாட்டிக் கொள்வதை மையப்படுத்தி இரண்டாம் பாதியில் வேறு திசையில் பயணித்து கொஞ்சம் தடுமாற்றத்துடன் முடிகிறது.

மொத்தத்தில் ராம் கந்தசாமி கதை எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும்; ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ வளர்ப்பு பிராணிகளால் குழந்தைகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியை விதைக்கும் படம்.