பீனிக்ஸ் சினிமா விமர்சனம்

0
277

பீனிக்ஸ் சினிமா விமர்சனம் :  | ரேட்டிங்: 3.5/5

நடிகர்கள் : சூர்யா ​சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனார் ரமேஷ், ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நக்ஷத்ரா, வர்ஷா விஸ்வநாத், நவீன், ரோகித், மது வசந்த், கிஷோர், ரிஹான், பிரசாந்த், ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் முருகதாஸ், ஆடுகளம் நரேன், ஸ்ரீஜித் ரவி
படக்குழுவினர் :
தயாரிப்பு: ராஜலட்சுமி ‘அனல்’ அரசு
இயக்கம்: ‘அனல்;’ அரசு
கதை, திரைக்கதை, வசனம்: ‘அனல்’அரசு
ஒளிப்பதிவு இயக்குனர்: வேல்ராஜ் ஆர்.
இணை இயக்குனர்: என். ஜான் ஆல்பர்ட்
இசை: சாம் சிஎஸ்
எடிட்டர்: பிரவீன் கே.எல்
கலை இயக்குனர்: மதன் கே
பாடலாசிரியர்: விவேகா, மதன் கார்க்கி, லோகன், வித்யா
நடனம்: பாபா பாஸ்கர், ஜானி
அதிரடி: ‘அனல்’ அரசு
தயாரிப்பு நிர்வாகி: சக்தி ஜெகதீசன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: எம்.எஸ்.முருகராஜ்
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அகமது, பராஸ் ரியாஸ்

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சம்பத்தை பட்டப்பகலில் நடுரோட்டில் 36 வெட்டுக்களுடன் வெட்டி சாய்க்கும் 17 வரது சிறுவன் சூர்யாவை கைது செய்து கோர்ட்டின் உத்தரவின்படி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கிறார்கள் போலீஸ்.
கணவனை கொலை செய்த சூர்யாவை கொலை செய்ய துடிக்கும் எம்.எல்.ஏ-வின் சம்பத்தின் மனைவி வரலட்சுமி, ஒரு கரைப்பட்ட போலீஸ் உதவியுடன் சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் வைத்து சூர்யாவை கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார். அங்கு சூர்யா அத்தனை பேரையும் அடித்து ‘துவம்சம்’ செய்கிறார். தாக்குதலிலும் சூர்யா காயம் பட்டாலும், பீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயிர்பிக்கிறார். அதை தொடர்ந்து கொலை வெறியுடன் தன்னை கொல்ல வரும் அடி ஆட்களையும் பந்தாடி அடித்து நெருக்கிறார். எப்படியாவது சூர்யாவை கொன்று விட வேண்டும் என்று வெறியுடன் இருக்கும் வரலட்சுமியின் மகன் பெரியளவில் கூட்டத்தை கூட்டி சூர்யாவை கொல்ல திட்டம் தீட்டி தானே இந்த முறை கலத்தில் இறங்குகிறான். ஒவ்வொரு முறையும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் உயிர்பிக்கும் சூர்யா இம்முறை கொலைகாரா கூட்டத்தின் சதி திட்டத்தை அறிந்து அவர்களை பெரிய அளவில் எதிர்கொள்ள தயாராகிறார். அடுத்து என்ன நடக்கிறது? சூர்யா எம்.எல்.ஏ. சம்பத்தை ஏன் கொலை செய்தார்? போன்ற கேள்விகளுக்கு அனல் பறக்கும் அதிரடி மூலம் விடை சொல்கிறது பீனிக்ஸ்.