பிரதர் சினிமா விமர்சனம் : பிரதர் திண்டாட்டத்தில் தத்தளிக்கும் பாசமலர்கள் | ரேட்டிங்: 2/5

0
639

பிரதர் சினிமா விமர்சனம் : பிரதர் திண்டாட்டத்தில் தத்தளிக்கும் பாசமலர்கள் | ரேட்டிங்: 2/5

ஸ்கிரீன் சீன் மீடியாஎன்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சுந்தர் ஆறுமுகம் தயாரித்து பிரதர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜேஷ்.எம்.

இதில் ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், பூமிகா,நட்ராஜ், ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் : ஒளிப்பதிவு : விவேகானந்த் சந்தோஷம்,படத்தொகுப்பு : ஆஷிஷ் ஜோசப், கலை வடிவமைப்பு : கிஷோர்.ஆர், இசை : ஹாரிஸ் ஜெயராஜ், சண்டைப்பயிற்சி : ஸ்டன்னர் சாம், நடனம் : சாண்டி, சதிஷ் கிருஷ்ணன்,பாடல்கள் : தாமரை, பார்வதி மீரா, தரண்.கே.ஆர்,பால் டப்பா (அணிஷ்)மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

தாய் தந்தையுடன் வசிக்கும் சட்டக் கல்லூரி மாணவர் கார்த்திக் (ஜெயம் ரவி). இவரின் நேர்மையான பேச்சு பல சிக்கல்களை உருவாக்குகிறது. சென்னையில் இவர் வசிக்கும்  அபார்ட்மென்ட் அசோசியேஷனைக் கலந்தாலோசிக்காமல் பழமையான கட்டடம் என்று இடிப்பு உத்தரவைப் பெற இதனால் பிரச்சனை ஏற்பட்டு தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை பார்க்க வரும் மகள் ஆனந்தி (பூமிகா சாவ்லா) தம்பி கார்த்திக்கின் நடவடிக்கையை மாற்றி காட்டுகிறேன் என்று ஊட்டியில் இருக்கும் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அக்கா வீட்டில் யோசிக்காமல் பேசும் பேச்சால் பிரச்சனை ஏற்படுகிறது. தன் கணவரின் தங்கை பிரியங்கா மோகன்  கார்த்திக்கிற்கு பாதுகாப்பு அதிகாரியாக பவுன்சர் வேலையை வாங்கித் தர, அங்கேயும் பிரச்சனை ஏற்பட்டு வந்து விடுகிறார். ஆனந்தி தம்பி கார்த்திக்கை தன் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக சேர்க்க, அங்கேயும் பிரச்சனை ஏற்படுகிறது.ஆனந்தியின் கணவர்(நட்டி), மாமனாருடன் (ராவ் ரமேஷ்) வாக்குவாதத்தில் ஈடுபட வீட்டை விட்டே வெளியேறும் சூழலில் அக்கா ஆனந்தியும் தம்பியுடன் வெளியேறுகிறார். தந்தை இந்த செய்தியை கேள்விப்பட்டு அக்காவை குடும்பத்துடன் சேர்த்து வைத்து விட்டு விட்டுக்கு வா என்று கூறுகிறார். இறுதியில் கார்த்தி தன் அக்கா குடும்பத்தை ஒன்றிணைத்தாரா? அக்கா-தம்பி பாசப்பிணைப்பின் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

எனர்ஜெடிக், துறுதுறுப்பு, இளமை துள்ளலுடன் கார்த்தியாக ஜெயம் ரவி பங்களிப்பு படத்திற்கு முழு பலம். காதல், அக்கா பாசம், நடனம், சண்டை என்று படத்தில் தன்னுடைய நடிப்பால் கவனத்தை ஈர்த்து படத்திற்கு அச்சாணியாக விளங்குகிறார்.

இவருடன் காதலியாக ப்ரியங்கா மோகன், தம்பிக்கு ஆதரவாக அக்கா பூமிகா, அக்காவின் கணவராக நட்ராஜ், மாமனாராக ராவ் ரமேஷ், காமெடிக்கு விடிவி கணேஷ், மாமியாராக சரண்யா பொன்வண்ணன், ஜெயம் ரவியின் தாயாக சீதா மற்றும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் துணை கதாபாத்திரங்கள் வந்து போகின்றனர்.

தாமரை, பார்வதி மீரா, தரண்.கே.ஆர்,பால் டப்பா (அணிஷ்) ஆகியோரின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இரண்டு பாடல்களை ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பின்னணி இசை பரவாயில்லை ரகம்.

ஊட்டி, சென்னை என்று தன் காட்சிக்கோணங்களால் அசர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம்.

படத்தொகுப்பு : ஆஷிஷ் ஜோசப், கலை, வடிவமைப்பு : கிஷோர்.ஆர், சண்டைப்பயிற்சி : ஸ்டன்னர் சாம், நடனம் : சாண்டி, சதிஷ் கிருஷ்ணன ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;களின் பணி நன்றாக உள்ளது.

அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் காதல் ஆகியவற்றின் சரியான அளவுகளைக் கொண்ட ஒரு ஃபீல்-குட் ஃபேமிலி என்டர்டெயின்னரின் அனைத்து அம்சங்களும் இந்த பிரதர் படத்தில் கொடுத்து இயக்கியிருக்கிறார் ராஜேஷ்.எம். ஆனால் அதை அழுத்தமாக திரைக்கதையில் கொண்டு வராததால் ரசிக்க முடியாமல் போய் விடுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

மொத்தத்தில் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சுந்தர் ஆறுமுகம் தயாரித்திருக்கும் பிரதர் திண்டாட்டத்தில் தத்தளிக்கும் பாசமலர்கள்.