பயமறிய பிரம்மை விமர்சனம் : பயமறிய பிரம்மை குழப்பமான கற்பனை மனநிலையில் பிரமிக்க வைக்கவில்லை | ரேட்டிங்: 2/5

0
255

பயமறிய பிரம்மை விமர்சனம் : பயமறிய பிரம்மை குழப்பமான கற்பனை மனநிலையில் பிரமிக்க வைக்கவில்லை | ரேட்டிங்: 2/5

சிக்சிடி நைன் எம் எம் பிலிம் சார்பில் ராகுல் கபாலி தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கும் படம் பயமறிய பிரம்மை

இதில் ஜெடி, குரு சோமசுந்தரம், ஹரீஷ் உத்தமன், ஜான் விஜய், சாய் பிரியங்கா ரூத், விஸ்வாந்த், ஹாரீஷ் ராஜு, ஜாக்ராபின், வினோத் சாகர், ஏகே, திவ்யா கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-பிரவீண் மற்றும் நந்தா, இசை-கே, எடிட்டர் – அகில், பிஆர்ஒ-யுவராஜ்

1978ல் இளம் வயது ஜெகதீஷ் (ஜெடி) தவறு செய்யாத போது தன்னை தாக்கியவரை கொலை செய்ய ஆரம்பிக்க, அதனை பார்க்கும் மாறன் ஜெகதீஷை தன் அடியாளாக வைத்துக் கொள்கிறார். வளர்ப்பு தந்தையாக பாவித்து அவருடன் பயணிக்கும் ஜெகதீஷ் மாறனுக்காக தன் குடும்பத்தை நிர்கதியாக விட்டு பிரிந்தும், தன் நண்பர்களை, விசுவாசமானவர்களை, எதிரிகளை தன் 25 ஆண்டு கால வாழ்க்கையில் 96 கொலைகள் செய்து தற்போது சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் கொடூரமான கொலைக் குற்றவாளி. அவனின் தொடர் கொலைகளை கேள்விப்பட்டு அவனைப் பற்றி புத்தகமாக எழுதி வெளியிட ஆசைப்படுகிறார் பிரபல சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கபிலன் (வினோத் சாகர்). சிறையில் இருக்கும் ஜெகதீஷை கண்டு பேட்டி எடுக்கிறார் கபிலன், அவரின் பார்வையில் ஜெகதீஷ் கதையை விவரிக்க முயல்வதே படத்தின் மீதிக்கதை.

கொலைக் குற்றவாளி ஜெகதீஷாக ஜே.டி அவரின் கதையை படிக்கும் குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஐந்து பேர் ஜெகதீஷ் கதாபாத்திரங்களாக மாறி அவரின் வாழ்க்கை போராட்டத்தை விவரிக்கும் காலகட்டங்களுக்கேற்ப அந்தந்த இடத்தில் தங்களை பொருத்தி முன்னெடுத்துச் செல்வது வித்தியாசமான முயற்சி.

மாறனான ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலனாக வினோத் சாகர், ஜெகதீஷின் மனைவியாக திவ்யா கணேஷ் மற்றும் பலர் படத்தின் பக்கமேளங்கள்.

ஒளிப்பதிவு-பிரவீண் மற்றும் நந்தா, இசை-கே ஆகிய இருவரும் தங்களது பங்களிப்பில் குறை வைக்கவில்லை.எடிட்டர் அகில் வித்தியாசமான கதையை குழப்பமில்லாமல் கொடுக்க முயற்சித்திருக்க வேண்டும்.

புத்தகத்தை வாசிப்பவர்கள் அந்த புத்தகத்தில் மெய்மறந்து அந்த கதாபாத்திரங்களாக மாறி முழுமையாக ஈடுபடுத்தி படித்தால் தான் எழுத்தாளனின் படைப்புக்கு வெற்றியாக அமையும். அதே போல் கொலை குற்றவாளியின் கதையை படிக்கும் வாசகர்கள் எவ்வாறு அதில் தங்களை பொருத்தி அந்த கதாபாத்திரங்களாக மாறி கொலை செய்தால் என்னவாகும் என்பதை வித்தியாசமான முயற்சியாகவும், தனித்துவமான தெரிய வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக குழப்பமான விவரித்தலுடன், கடைசி அத்தியாயத்தில் ஆரம்பித்து முதல் அத்தியாயத்திற்கு இறுதியில் வருவதும், தவறு செய்யும் சூழலில் நிதானமாக யோசித்து செயல்பட்டிருந்தால் இந்த கொலைக்குற்றவாளி பட்டத்தை வாங்கியிருக்க தேவையில்லை என்ற கோணத்திலும் பயமறிய பிரம்மை படத்தை தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார் ராகுல் கபாலி.

சிக்சிடி நைன் எம் எம் பிலிம் சார்பில் ராகுல் கபாலி தயாரித்திருக்கும் படம் பயமறிய பிரம்மை குழப்பமான கற்பனை மனநிலையில் பிரமிக்க வைக்கவில்லை.