படிக்காத பக்கங்கள் சினிமா விமர்சனம் : படிக்காத பக்கங்கள் பாதிப்பு ஏற்படுத்தவில்லை | ரேட்டிங்: 2/5
எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் சார்பில், முத்துக்குமார் மற்றும் செல்வம் தயாரிப்பில், மாதப்பன் இயக்கத்தில், யாஷிகா ஆனந்த், பிரஜின், ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், பாலாஜி, லொள்ளுசபா மனோகர், தர்ஷினி ஆகியோர் நடித்திருக்கும் படம் படிக்காத பக்கங்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :இசை : ஜாஸ்ஸி கிஃப்ட், பாடல் வரிகள் : வைரமுத்து, ஒளிப்பதிவு : டோலி, பின்னணி இசை : எஸ் எஸ் சாயி தேவ் வி, எடிட்டர் : ஷரன் சண்முகம், நடனம் : நோபல் ஜே.சி.கே, ஒலிப்பதிவு : நோபல, ஆடை : சேகர், ஒப்பனை : பிரதீப், பிரியங்கா, சண்டைக்காட்சி : மிரட்டல் செல்வா, கலை : மஞ்சு, மக்கள் தொடர்பு : குணா
ஒதுக்குபுறமாக இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் ஒரு பெண் வர அவளை மிரட்டி தாக்கும் காட்சிகளுடன் படம் தொடங்குகிறது. அதன் பின் நீதிமன்ற விசாரணைக்கு வரும் நடிகை ஸ்ரீஜாவை தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்படும் காட்சிகள் காட்டப்படுகிறது. கோர்ட்டிலிருந்து வெளியே வரும் ஸ்ரீPஜா தனது தங்கையின் கல்லறைக்கு செல்லும் வழியில் போலீஸ் அதிகாரி காதலன் ஷாம் (பிரஜன்), மற்றும் ஹோட்டல் உரிமையாளர் ஜார்ஜ் மரியான், ஆகியோரை உடனே தொடர்பு கொண்டு கல்லறைக்கு வரச் சொல்லி உண்மைகளை கூறுகிறார். அதாவது நடிகை ஸ்ரீPஜா ஏற்காட்டில் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒய்வு எடுக்கும் போது முத்து என்ற தொலைக்காட்சி நிருபர் அவளைப் பேட்டி காண அவரது ஹோட்டலுக்கு வருகிறார்.சிறுதி நேரம் கழித்து, நேர்காணல் செய்பவர் போலி நிருபர் என்று அவரது செய்கையாலே புரிந்து கொண்ட நடிகை ஸ்ரீPஜா பெண்களை மிரட்டி பணிய வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு மோசமான கொலைகார கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிகிறாள். அதே சமயம் தன் சகோதரி தர்ஷினியின் கொலைக்கு இந்த கும்பல் தான் காரணம் என்பதை அறிந்து போலி நிருபருடன் மோதி அவனிடமிருந்து ஆதாரத்தை எடுத்து, அவனைக் கொன்று அந்த சம்பவத்தை மறைத்து நாடகமாடி நிரபராதியாக வெளியே வந்து விட்டதாக கூறி, தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை கொடுத்து கொலைக் கும்பலை பிடிக்குமாறு சொல்கிறார். போலீஸ் அதிகாரி பிரஜன் கொலைக்கும்பலை கைது செய்தாரா? சதி திட்டம் தீட்டும் வில்லன்களால் நடிகை ஸ்ரீஜாவை கொல்ல முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிரஜன் (ஷாம்) முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் வந்து போகிறார். கதாநாயகி யாஷிகா ஆனந்த் (சிரிஜா) கவர்ச்சியும், நடிப்பும் கலந்து கொடுத்தாலும் வலுவில்லாத திரைக்கதையால் சோபிக்க முடியவில்லை. ஹோட்டல் உரிமையாளர் ஜார்ஜ் மரியன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார். தங்கையாக வரும் தர்ஷினி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சைக்கோ வில்லன் முத்துக்குமார், அதாங்க பாலாஜி மற்றும் ருத்ரா ஆகியோரின் நடிப்பு துளியும் எடுபடவில்லை.
எடிட்டர் : ஷரன் சண்முகம் காட்சிகளை திறம்பட கொடுக்க தவறிவிட்டார்.இசை : ஜாஸ்ஸி கிஃப்ட், ஒளிப்பதிவு : டோலி, பின்னணி இசை : எஸ் எஸ் சாயி தேவ் வி, நடனம் : நோபல் ஜே.சி.கே, ஒலிப்பதிவு : நோபல், சண்டைக்காட்சி : மிரட்டல் செல்வா, கலை : மஞ்சு ஆகியோரின் திறமை வீணடிக்கப்பட்டுள்ளது.
தங்கை சாவிற்கு காரணமான அரசியல் பின்பலம் உள்ள கும்பலை பழி தீர்க்கும் அக்காவைப் பற்றிய படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்வம் மாதப்பன். ஆசை வார்த்தைகள் சொல்லி ஏமாற்றப்படும் பெண்கள் பின்னர் மிரட்டப்பட்டு, பணம் பறிக்கப்பட்டு, மனஉளைச்சல் ஏற்படுவதும், மீண்டும் சீரழிக்கப்படுவதும், அத்தகைய சம்பவங்கள் தொடராமல் இருக்க பெற்றோரிடம் அல்லது போலீசிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக ஆணித்தரமாக சொல்லாமல் கமர்ஷியல் மசாலாவுடன் சுவாரஸ்யம் இல்லாமல் கொடுத்துள்ளார் இயக்குனர் செல்வம் மாதப்பன்.
மொத்தத்தில் எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் சார்பில், முத்துக்குமார் மற்றும் செல்வம் தயாரித்திருக்கும் படிக்காத பக்கங்கள் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.