நாங்கள் சினிமா விமர்சனம் : நாங்கள் ; கண்டிப்பு மிகுந்த தந்தையுடன் மகன்களின் பாசமிகு போராட்டம் | ரேட்டிங்: 3/5
கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்திருக்கும் படத்தை எழுதி ஒளிப்பதிவு, எடிட்டிங் செய்து இயக்கியிருக்கிறார் அவினாஷ் பிரகாஷ்.
இதில் ராஜ்குமாராக அப்துல் ரஃபே, கார்த்திக் ராஜ்குமாராக மிதுன் வி, துருவ் ராஜ்குமாராக ரித்திக் மோகன், கௌதம் ராஜ்குமாராக நிதின் டி, பத்மாவாக பிரார்த்தனா ஸ்ரீகாந்த், ரவிக்குமாராக சப் ஜான் எடத்தட்டில், கேத்தியாக ராக்ஸி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள்:- இசை : வேத் சங்கர் சுகவனம், தயாரிப்பு வடிவமைப்பு : விராஜ்பாலா ஜே, ஒத்திசைவு ஒலி : முகமது சாஜித், ஒலி வடிவமைப்பு : சச்சின் சுதாகரன் (ஒத்திசைவு சினிமா), ஹரிஹரன் எம், ஒலிக்கலவை : அரவிந்த் மேனன், கலர் கிரேடிங் : யுகேந்திரா (கிராசஃப்ட்ஸ் ஒர்க்ஸ்), தயாரிப்பு நிர்வாகி : கிருஷ்ண சேகர் டி.எஸ், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் : ஏ.எம். சாதிக், மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
ஊட்டியில் கான்வென்ட் நடத்தி வரும் தாளாளர் (அப்துல் ரஃபே) ராஜ்குமார், மனைவி பத்மாவை (பிரார்த்தனா ஸ்ரீPகாந்த்) பிரிந்து வாழ்வதோடு, மூன்று மகன்களை கார்த்திக் (மிதுன் வி), துருவ் (ரித்திக்மோகன்) மற்றும் கௌதம் (நிதின் டி) தனி ஆளாக இருந்து வளர்கிறார். எஸ்டெட் வீட்டில் வசிக்கும் இவர்களுடன் நாய் கேத்தி (ராக்ஸி)யும் வளர்கிறது.வீட்டில் அனைத்து வேலைகளையும் மகன்கள் செய்கின்றனர். தந்தை மகன்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வதும், அவர்கள் தவறு செய்தால் தண்டனை கொடுப்பது என்று இருப்பதால் மகன்களும் தந்தையிடம் பயத்துடன் ஒட்டுதல் இல்லாமல் வளர்கின்றனர். வேலையிலும், வீட்டிலும் இருக்கும் அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் தந்தை ராஜ்குமார் தனிமையில் தவிக்கிறார். தந்தையும், மகன்களும் சந்தோஷமான சூழு;நிலை இல்லாமல் வாழ்கின்றனர். அதன்பின் மகன்கள் எடுக்கும் முடிவு என்ன?தந்தை இதற்கு சம்மதம் தெரிவித்தாரா? பிரிந்து சென்ற தாய் மகன்களுக்காக மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தாரா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
அப்துல் ரஃபே மூன்று பிள்ளைகளின் தந்தையாகவும், கல்வியாளராகவும் இரண்டு வித பரிணாமங்களில் கண்டிப்பு நிறைந்தவராக காண்பிக்கப்பட்டாலும், அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதை விவரிக்கும் இடத்தில் நடிப்பில் தனித்து நிற்கிறார்.
சிறுவர்கள் மிதுன், ரித்திக் மோகன், நிதின் தினேஷ் மூன்று பேரும் படத்தின் முதுகெலம்பாக எவ்வளவு இன்னல்கள் ஏற்பட்டாலும் அதனை சமாளித்து பள்ளி பாடத்துடன் தங்களின் வாழ்க்கையை எப்படி கற்றுக் கொண்டு சிறப்பாக வாழ வேண்டும் என்பதை குழந்தைதனத்துடன் அப்பாவித்தனமாக நடித்து கைதட்டல் பெறுகின்றனர்.
மனைவி பத்மாவாக பிரார்த்தனா ஸ்ரீகாந்த், ரவிக்குமாராக சப் ஜான் எடத்தட்டில் என்று அனைவரும் கொடுத்த பாத்திரத்தை கூடுதல் சிறத்தையோடு செய்துள்ளனர். இவர்களுடன் கேத்தி என்ற நாயாக ராக்ஸி பங்களிப்பு சிறப்பு.
வேத் சங்கர் சுகவனம் பின்னணி இசை கச்சிதம்.
திரைப்படத் தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான அவினாஷ் பிரகாஷ் ஊட்டியின் அழகையும், சிறுவர்களின் குறும்புதனத்தையும், சந்தோஷம், சோகம் கலந்த உணர்ச்சிகரமான தருணங்களை கருப்பு, வெள்ளை கலந்த வண்ணங்களின் எடுத்துக்காட்டுடன் வித்தியாசமான காட்சிக்கோணங்களில் படைத்து உயிரோட்டமாக கொடுத்துள்ளார்.
சமூகத்தில் உயரிய பதவியில் இருக்கும் சிங்கிள் பேரண்டாக மகன்களை வளர்க்கும் தந்தையின் பார்வையில் கண்டிப்பும், தண்டிப்பும் மிகையாக இருக்க, அதனால் ஏற்படும் உறவில் சிக்கல்கள், விரிசல்கள், மனஉளைச்சல்களை பிரதிபலிக்கும் பிம்பமாக படத்தை உணர்ச்சிக் குவியலாக குழந்தைகள் நடித்திருக்கும் முக்கிய படமாக இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் அவினாஷ் பிரகாஷ்.
மொத்தத்தில் கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ள நாங்கள் ; கண்டிப்பு மிகுந்த தந்தையுடன் மகன்களின் பாசமிகு போராட்டம்.