நரிவேட்டை சினிமா விமர்சனம் : | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள்: டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், ப்ரணவ் தியோஃபைன், நந்து, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன், சுதி கேலிகட், ரினி உதயகுமார், அப்புன்னி சசி, குமார் சேது, உன்னி கிருஷ்ணன், வினோத் போஸ், தொம்மன் மற்றும் பலர்.
படக்குழு :
இயக்கம் : அனுராஜ் மனோகர்
தயாரிப்பு நிறுவனம் : இந்தியன் சினிமா கம்பெனி
தயாரிப்பாளர்கள் : திப்பு ஷான், ஷியாஸ் ஹாசன்
எழுத்து : அபின் ஜோசஃப்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : விஜய்
கலை இயக்கம் : ஆ பவா
சண்டைப் பயிற்சி: ஃபீனிக்ஸ் பிரபு, அஷ்ரசூஃப் குருக்கள்
படத்தொகுப்பு : ஷமீர் முஹமத்
ஆடைகள் : அருண் மனோகர்
நடன இயக்கம் : ஸ்பிரிங்
படங்கள் : ஷைன் சபூரா, ஸ்ரீராஜ் கிருஷ்ணன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: சாகேர் {ஹசைன்
தயாரிப்பு நிர்வாகி : பிரதாபன் கள்ளியூர்
மக்கள் தொடர்பு : ரியாஸ் மு அஹ்மத், பாரஸ் ரியாஸ்
டோவினோவின் கதாபாத்திரம் போலீசாரிடமிருந்து தப்பி ஓடிச் செல்லும் போது, அவரை போலீஸ் படை வளைத்து தாக்கி பிடித்து விசாரணைக்காக ஒரு அழைத்துச் செல்வதுமாக படம் தொடங்குகிறது. விசாரணையின் போது வர்கீஸ் பீட்டர் (டோவினோ) ஒரு போலீஸ்காரர் என்பதை விரைவில் அறிந்து கொள்கிறோம். கான்ஸ்டபிள் வர்கீஸின் பார்வையில் சொல்லப்படும் காவல்துறையின் சிக்கலான உள் இயக்கவியலை இந்தப் படம் வழிநடத்துகிறது. கேரள மாநிலம் வயநாடு காட்டு பகுதியில் பகுதியில் பழங்குடி மக்கள் தங்களின் நிலம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக போராட்டம் நடத்துகிறார்கள். அரசாங்கத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் நிலம் வழங்கப்படாததால், நிலையான வேலை கிடைக்காததால், மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு குடியேறும் முயற்சியில், பழங்குடி மக்கள் தலைவர்கள் இறுதியாக முத்தங்கா ரிசர்வ் பகுதியில் ஒன்றுகூடி போராட்டம் நடத்த முடிவு செய்கிறார்கள். அதை ஒடுக்க நினைத்து அரசு, அங்கு பதற்றமான சூழல் உருவாகாமல் இருப்பதற்கு, அந்த பகுதியில் இருந்து பழங்குடி மக்களை திரும்ப அனுப்புவதற்கும், போலீஸ் அதிகாரி சேரன் தலைமையில் டீம் அங்கு வந்து கண்காணிக்கிறது. அந்த டீமில், வர்கீஸ் பீட்டர் (டொவினோ தாமஸ்), பஷீர் (சுராஜ் வெஞ்சரமூடு) போன்ற காவலர்கள் அடங்குவார்கள். இந்நிலையில், பழங்குடி மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாததால் போலீஸ் அதிகாரி சேரன் அரசியல் தலைவர்களின் அழுத்தத்தால் தள்ளப்படுவதால் தன் போலீஸ் புத்தியை தந்திரமாக பயன்படுத்தி ஒரு எதிர்பாராத சம்பவத்தை நடத்துகிறது. அதில் வர்கீஸ் பீட்டரின் (டொவினோ தாமஸ்) நெருங்கிய நண்பரான தலைமை காவலர் பஷீர் (சுராஜ் வெஞ்சரமூடு) கொல்லப்படுகிறார். இதை பழங்குடி மக்கள் தான் நடத்தினார்கள் என்று பழி அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை வர்கீஸ் பீட்டர் அறிந்து உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த நிலையில், பழங்குடி மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே சில மோதல்கள் வெடிக்கிறது. அப்போது அங்கு என்ன நடந்தது. சாதாரண போலீஸ்காரர் வர்கீஸ் பீட்டர் என்ன செய்தார். அவர் எப்படி பாதிக்கப்பட்டார். கொல்லப்பட்ட தனது நண்பருக்கும், பழங்குடி மக்களுக்கும் நீதி கிடைத்ததா என்பது நரி வேட்டை படத்தின் மீதிக்கதை.