நந்திவர்மன் சினிமா விமர்சனம் : நந்திவர்மன் வரலாற்று பின்னணியில் இயற்;கைக்கு அப்பாற்பட்ட புதிரான மாய உலகத்தை கண்டுபிடிக்கும் தனித்துவமான தில்லான ஆராய்ச்சி பயணம் | ரேட்டிங்: 3/5

0
255

நந்திவர்மன் சினிமா விமர்சனம் : நந்திவர்மன் வரலாற்று பின்னணியில் இயற்;கைக்கு அப்பாற்பட்ட புதிரான மாய உலகத்தை கண்டுபிடிக்கும் தனித்துவமான தில்லான ஆராய்ச்சி பயணம் | ரேட்டிங்: 3/5

ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்திருக்கும் நந்திவர்மன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.வி. பெருமாள் வரதன்.

இதில் சுரேஷ் ரவி – குரு வர்மன், ஆஷா வெங்கடேஷ் – இலக்கியா, போஸ் வெங்கட் – போஸ் வெங்கடாசலம், நிழல்கள் ரவி – சக்கரவர்த்தி, கஜராஜ் – தர்மராஜ், மீசை ராஜேந்திரன் – பழனிவேல் ராயன், ஆடுகளம் முருகதாஸ் – ஜேசிபி மணி, அம்பானி சங்கர் – கால்சட்டை, கோதண்டம் – கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி – எஸ்.வி.பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்: எடிட்டர்: சான் லோகேஷ், இசை: ஜெரார்ட் பெலிக்ஸ், ஒளிப்பதிவு: சேயோன் முத்து, ஸ்டண்ட்: சுதேஷ், கலை இயக்குனர்: முனிகிருஷ்ணன், பாடலாசிரியர்கள்: மதன் கார்க்கி, கு.கார்த்திக், ஆடை வடிவமைப்பாளர்: சிவகார்த்திக், ஒப்பனை: ரகுராமன், நடனம்: ஸ்ரீPகிரிஷ், ஒலி வடிவமைப்பு மற்றும் கலவை: ஹரி பிரசாத் எம்.ஏ, வடிவமைப்புகள்: நரி கண், ஸ்டில்ஸ்: ராஜேந்திரன், தயாரிப்பு மேலாளர்: ரமேஷ் மற்றும் ஹரி வெங்கட், நிர்வாக தயாரிப்பாளர் : ஆர்.பாலகுமார், பிஆர்ஓ: சுரேஷ் சுகு, தர்மதுரை, சதீஷ் (ஏய்ம்)

ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் செஞ்சி அருகில் உள்ள செல்வ செழிப்பு நிறைந்த அனுமந்தபுரம் என்ற கிராமத்தை பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆண்டு வருகிறார். அனுமந்தபுரத்தை நெருங்கவே பல மன்னர்கள் தயங்கும் நிலையில் அதன் செல்வ செழிப்பையும், அங்கிருக்கும் அனுமந்தீஸ்வரர் கோயிலுக்குள் தங்கப் புதையல் இருப்பதை அறிந்த கோரா என்ற கொள்ளையன் துணிந்து அங்கே  கொள்ளையடிக்க செல்கிறான். சித்ரா பௌர்ணமி அன்று கோயிலில் மன்னன் நந்திவர்மன் தியானத்தில் இருப்பதை அறிந்து கொண்ட கோரா மன்னனை தாக்குகிறான். இச்செயலால் நிலைகுலைந்து போனாலும் உயிர் போகும் தருவாயில் நந்திவர்வன் தன்னிடம் இருக்கும் அரூப மாய வாளை எடுத்து கோராவை கொன்று தானும் இறந்து விடுகிறார். கூர் முனையுடன் கண்களுக்கு புலப்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும் அரூப மாய வாள் கைப்பிடி மட்டுமே கண்களுக்கு புலப்படும் ஆனால் எதிரியை பதம் பார்த்து வெட்டும் போது கண்களுக்கு சிகப்பு நிறத்தில் அந்த வாளின் கூர்மையான நிலா போன்ற பகுதி புலப்படும் தன்மையுடையது.  அந்த அரூப வாளுடன் கோயிலும்  நாளடைவில் அனுமந்தபுரம் மண்ணில் புதையுண்டு போக அதன் வரலாற்று சிறப்பை அறிந்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே. இந்த நந்திவர்மன் கதை தொடக்கத்தில் வரைகலை மூலம் சித்திரக்கப்படுகிறது. அதன் பின்  தற்போதைய காலகட்டத்தில் கதை பயணிக்கிறது. அனுமந்தபுரம் கிராமத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே மக்கள் நடமாடுவதில்லை. அதற்கு காரணம் அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருவதே. இதனிடையே போஸ் வெங்கட் தலைமையிலான தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி பல்கலைக்கழக மாணவ குழுவினர் இந்த கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்து புதையுண்ட அனுமந்தீஸ்வரர் கோயிலை கண்டுபிடிக்க அந்த கிராமத்திற்கு வருகின்றனர். அதன் பின்  கிராமத்தில் சிலரும், ஆராய்ச்சி மாணவர் சிலரும் இறக்க நேரிட, கிராமத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்புகிறது. ஆராய்ச்சி செய்பவர்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் சுN;ரஷ் ரவி தலைமையில் பாதுகாப்பு தரப்படுகிறது. இறுதியில் இந்த தடைகளை தாண்டி போலீஸ் உதவியுடன் போஸ் குழுவினர் கோயிலையும் தங்கப் புதையலையும் கண்டுபிடித்தார்களா இல்லையா? அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கு யார் காரணம்? இறுதியில் என்ன நடந்தது? என்பதே நந்திவர்மன் படத்தின் மீதிக் கதை.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குரு வர்மனாக சுரேஷ் ரவி காவல்துறை அதிகாரி தோற்றத்தில் கச்சிதமாக பொருந்தி மிடுக்குடன், கம்பீரமாக காட்சியளித்து, ஆராய்ச்சிக்கு உதவி செய்து இறுதியில் உண்மையாக காரணத்தை கண்டுபிடிப்பதும், ஆக்ஷன் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் நிறைவாக செய்துள்ளார்.

இலக்கியாவாக ஆஷா வெங்கடேஷ் தொல்லியல்துறை மாணவியாகவும், காதலியாகவும் முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளார்.

ஆராய்ச்சிக்கு உதவும் அதிகாரியாக நல்ல மனிதராக போஸ் வெங்கட்,தொல்லியல்துறை உயர் அதிகாரி வில்லன் சக்கரவர்த்தியாக நிழல்கள் ரவி, ஊர்தலைவர் தர்மராஜாகவும் மற்றும் ஒரு வில்லனாகவம் கஜராஜ், உயர் போலீஸ் அதிகாரி பழனிவேல் ராயனாக மீசை ராஜேந்தர், ஜேசிபி மணியாக ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், குடிகாரராக கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி ஆகியோர் படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

ஜெரார்ட் பெலிக்ஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் புதிரான மர்ம முடிச்சுகளுக்கு திகில் கலந்த பயத்தை கொடுத்திருக்கிறார்.

ஓளிப்பதிவாளர் சேயோன் முத்து அனுமந்தபுரம் கிராமத்தின் சூழலையும், ஆராய்ச்சிக்காக தேர்ந்தெடுக்கும் இடங்கள், அமானுஷ்ய பயமுறுத்தல்கள், மாய வாள் மற்றும் இறுதியில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள்  அனைத்தையும் தன் காட்சிக்கோணங்களால் பட்ஜெட்டிற்குகேற்ற பிராம்மாண்டத்தை காட்டி அசத்தியுள்ளார்.

மற்றும் கலை இயக்குனர் முனிகிருஷ்ணன், எடிட்டர் சான் லோகேஷ் பணி கச்சிதம்.

நந்தி வர்மன் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தடையின்றி பின்னிப் பிணைந்த ஒரு நன்கு சித்தரிக்கப்பட்ட சிந்திக்க வைக்கும் கதைக்களத்தை கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜி.வி. பெருமாள் வரதன். வரலாற்று கதையில், மர்மம், திகில், அமானுஷ்யம், கொலை, சூழ்ச்சி, புதையல், அரூப வாள் என்று  நுணுக்கமான புதிரான விவரிப்பில் அகழ்வாராய்ச்சியையும் கலந்த கலவையாக அனுபவமுள்ள கலைஞர்களின் நடிப்பால் ஒரு புதிய அனுபவத்தை கொடுப்பதில் ஜெயித்துள்ளது.

மொத்தத்தில் ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்திருக்கும் நந்திவர்மன் வரலாற்று பின்னணியில் இயற்;கைக்கு அப்பாற்பட்ட புதிரான மாய உலகத்தை கண்டுபிடிக்கும் தனித்துவமான தில்லான ஆராய்ச்சி பயணம்.