தூவல் விமர்சனம் : தூவல் சுவாரஸ்யம் கலந்து வெடிக்கும் இயற்கையின் சாரல்  | ரேட்டிங்: 2.5/5

0
262

தூவல் விமர்சனம் : தூவல் சுவாரஸ்யம் கலந்து வெடிக்கும் இயற்கையின் சாரல்  | ரேட்டிங்: 2.5/5

சைகர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் தூவல் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜவேல் கிருஷ்ணா.

இதில் ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு – தர்வேஸ், இசை – சதீஷ், எடிட்டிங் – ராம்கோபி, கலை – ஜெயகுமார், பாடல்கள் – மோகன் ராஜா, பிஆர்ஒ-புவன்

ஆற்றங்கரையைச் சுற்றி வாழ்வாதாரத்தை நம்பி இருக்கும் கிராமம். ஆற்றில் மிகுதியாக நீர் வரத்து இருக்கும் நேரத்தில் மீன் பிடிப்பது, சாராயம் காய்ச்சுவது, மரம் வெட்டுவது, காட்டில் மிருகங்களை வேட்டையாடுவது என்று மக்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப தொழில் செய்து வாழ்கின்றனர். அந்த கிராமத்தில் இருக்கும் வன சரக அலுவலகத்தில் பணி செய்யும் ராஜ்குமார் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார். அதே சமயம் வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் தொழிலை செய்து வரும் சிவம் இவருக்கு எதிரியாக இருக்கிறார். இவர்களின் பகை கிராமத்து மக்களை எப்படி பாதிக்கிறது? இவர்களின் பேராசை இயற்கையால் எப்படி நிராசையானது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராஜ்குமார் – ( சங்கர் – வன அதிகாரி ), சாந்தா – ( கோவிந்தம்மா – குட்டி பாட்டி ), சிவம் – ( சிவம் – வில்லன் ), மாஸ்டர் நிவாஸ் – ( குட்டி) , இளையா ( இளையா – காதலன்), ராஜ்வேல் ( மாமா ), கிருஷ்ணா ( கிருஷ்ணா ) ஆகிய அனைவருமே கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை யதார்த்தமான நடிப்பின் மூலம் கண் முன்னே நிறுத்துகின்றனர். இதில் முக்கியமாக சிறுவன் குட்டி கஷ்டப்பட்டு மீன் பிடிக்க எடுக்கும் முயற்சியும், சிறிய ஆற்றில் மீன் பிடிக்க செல்லும் கிராமத்து மக்கள், சிறுவர்களின் நுணக்கங்கள், வெடி வைத்து சீக்கிரம் மீனை பிடிக்கலாம் என்ற நோக்கத்துடன் செல்லும் வில்லனின் அடாவடி செய்கை என்று சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

ஒளிப்பதிவு – தர்வேஸ், மோகன் ராஜாவின் பாடல்களில் சதீஷின் இசை , எடிட்டிங் – ராம்கோபி, கலை – ஜெயகுமார் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

பெருக்கெடுத்து ஒடி வரும் ஆறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறு சிறு அருவிகளாக மாறும் சிற்றருவிகளைத்தான் ‘தூவல்’ என்கிறார்கள். அந்த சிற்றவிகளை நம்பி மீன் பிடித்து வாழும் ஆற்று மீனவர்களை பற்றிய கதைக்களத்தில் காதல், மோதல், பகை, போட்டி, பொறாமை கலந்து பணத்தாசை பிடித்த மனிதர்களின் பேராசையை தகர்க்கும் சிதைக்கும் சக்தி இயற்கையின் கையில் தான் இருக்கிறது என்பதை மண் மணம் மாறாமல் புதிய வித்தியாசமான கோணத்தில் கொடுத்துள்ளார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.

மொத்தத்தில் சைகர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் தூவல் சுவாரஸ்யம் கலந்து வெடிக்கும் இயற்கையின் சாரல்.